Generated Image November 20 2025 6 37PM

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக

196 0

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தநிலையில் கடந்த 2 மாதமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

தேர்தலுக்கு தயாராகும் விஜய்

சட்டமன்ற தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. இன்னும் 4 மாத காலம் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. திமுக- அதிமுக மட்டுமே கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சி அமைத்து வரும் நிலையில், அதனை மாற்றி அமைக்கும் வகையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என தனது கட்சிக்கு பெயர் சூட்டிய விஜய், விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் இரண்டு மாநில மாநாட்டை நடத்தி அசத்தியுள்ளார். அடுத்ததாக மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக செல்ல சுற்றுப்பயணத்தை அமைத்திருந்தார்.

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு

திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை விஜய் முடித்த நிலையில், கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அளவுக்கதிகமான மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்த நிலையில், கடந்த இரண்டு மாதமாக எந்த வித நிகழ்வுகளிலும் விஜய் கலந்து கொள்ளாமல் அமைதி காத்துவந்தார். இதனையடுத்து கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தை சேர்ந்தர்களை சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். எனவே அடுத்தகட்ட பிரச்சாரம் தொடர்பாக விஜய்  என்ன முடிவு எடுக்கப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் மீண்டும் பிரச்சாரம்

அந்த வகையில் மீண்டும் பொதுமக்களை சந்திக்கும் வகையில் பிரச்சார கூட்டங்களை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார்.  டிசம்பர் 4ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் தவெக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனை விஜய் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது பிரச்சார பயணத்தை சேலத்தில் தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த முறை வார விடுமுறை நாட்களில் மட்டுமே பிரச்சார கூட்டங்களை விஜய் நடத்திய நிலையில் தற்போது வார நாட்களில் நடத்த இருப்பதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்க காவல் ஆணையரிடம் தவெக தரப்பில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

Related Post

ASS

ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்

Posted by - April 19, 2026 0
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு 16வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ஏன் எனவும், 16வது எண் நோட்டாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.…
SSS

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Posted by - March 11, 2026 0
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி…
Generated Image January 23 2026 11 16AM

வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?

Posted by - March 23, 2026 0
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், பிரதான கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு…
Generated Image November 24 2025 10 41AM

நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளது – அண்ணாமலை

Posted by - November 24, 2025 0
நாடு முழுவதும் குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை மக்களிடம் உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெற்ற இலங்கை…
tvk vijay

TVK Vijay : ’விஜய்க்கு 120 வரை தொகுதிகள்’ இதையெல்லாம் நம்பலாமா?

Posted by - April 30, 2026 0
‘இந்தியா டு டே நிறுவன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அடிப்படையில் விஜய் 90 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லையென்றும், இது திரைப்படத்திலும் கனவிலுமே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *