சீனாவில் மீண்டும் கொரோனா போன்ற கொடிய தொற்று பரவும் அபாயம்- நிபுணர்கள் எச்சரிக்கை

330 0

பீஜிங்:

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது. தொடர்ந்து அந்த கொரோனா அரக்கன் உருமாறி பொதுமக்களை பாடாய் படுத்தியது. இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது.மீண்டும் கொரோனா.. அதே சீனாவில்.! ஒரு மணி நேரத்தில் 3.8 லட்சம் பேரை  பாதிக்கும்! கிளம்பிய அடுத்த அலை | New Wave Of Corona Variant hits China, it  May See 65 Million Cases Weekly ...

இருந்த போதிலும் கொரோனா முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சூழ்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டு உள்ளது. இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் சில தொற்று நோய் நிபுணர்கள் இதை மறுத்து உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வைரஸ் பரவும் என்பதை ஏற்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவலை தடுத்து விடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Related Post

பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதா..? இந்த விஷயங்களை தவிர்த்தால் சரியாயிடும்..!

Posted by - December 3, 2022 0
பகலில் மந்தமாக இருப்பது எல்லோருக்கும் எப்போதாவது ஒருமுறை ஏற்படும். இருப்பினும், நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை சந்திப்பதாக கவனித்திருந்தால், நீங்கள் ஹைப்பர் சோம்னியாவை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.…

சீனாவில் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்

Posted by - August 30, 2023 0
பெய்ஜிங்: காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள்…

தாயின் கருப்பையில் இருக்கும் போதே பச்சிளம் குழந்தைகளின் மூளையை தாக்கும் கொரோனா- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted by - April 10, 2023 0
வாஷிங்டன்: 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது. இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக…

துருக்கியை தொடரும் சோகம் – சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலி

Posted by - February 21, 2023 0
அங்காரா: தெற்கு துருக்கி – சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என…

அடர் சிவப்பு நிறத்தில் அழகாக தோன்றிய ‘ரத்த நிலா’ – ​முழு சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு ரசித்தனர்

Posted by - September 8, 2025 0
சென்னை: வானியல் அபூர்​வ​மான முழு சந்​திர கிரகணம் நேற்று நிகழ்ந்​தது. கிரகணத்​தின்​போது, அழகிய சிவப்பு நிறத்​தில் காணப்​பட்ட சந்​திரனை ஏராள​மானோர் உற்​சாகத்​துடன் பார்த்து மகிழ்ந்​தனர். சூரியன், சந்​திரன், பூமி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *