துருக்கியை தொடரும் சோகம் – சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலி

249 0

அங்காரா:

தெற்கு துருக்கி – சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.துருக்கியை தொடரும் சோகம் - சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலி |  3 killed, 213 injured as two earthquakes shatter lives in Turkey

இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிறிது நேரத்தில் துருக்கியின் ஹடாய் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தடவை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். துருக்கியின் 3 இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது..

Related Post

இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு – நடந்தது என்ன.?

Posted by - May 22, 2025 0
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க இன்று 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. சீனாவில் நடைபெற்ற கூட்டத்தின்…

கனடா காட்டுத்தீ.. பேரழிவை நினைவூட்டும் மஞ்சள் நிற புகையில் மூழ்கிய நியூயார்க்!

Posted by - June 8, 2023 0
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டது. காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று…

இது புதிய வைரஸா..? இதுவும் கொரோனா போன்றதா..? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா..?

Posted by - January 7, 2025 0
ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்பது ஒரு பொதுவான சுவாச வைரஸ் ஆகும். இது கீழ் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை (சளி போன்றது) ஏற்படுத்துகிறது. இது பொதுவாக…

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்

Posted by - May 7, 2025 0
தொலைக்காட்சி ஒன்றின் நேரலையில் பாகிஸ்தான் அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்த கருத்துக்கு, அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரே ஃபேக்ட் செக் செய்து அவரது மூக்கை உடைத்த சம்பவம்…

‘விஷம்’ கக்கும் பாகிஸ்தான் பின்னணியில் செயல்படுவோரை அடையாளம் காண்பது அவசியம்!

Posted by - August 14, 2025 0
சில நாட்களாக பாகிஸ்தானிடம் இருந்து வரும் தடித்த வார்த்தைகள் இந்திய அரசும், மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *