சென்னையில் இடியுடன் கூடிய கனமழை- காலை 7 மணி வரை நீடிக்கும் என தகவல்

255 0

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை | Heavy rain with thunder  at various places in Chennai

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மேலும், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Post

பட்டுபோன்ற மென்மையான நீளமான கூந்தலை பெறணுமா? அப்ப ‘இந்த’ 7 உணவுகளை மறக்காம சாப்பிடுங்க!

Posted by - December 26, 2023 0
ஆண், பெண் என அனைவரும் தங்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்கள். நவீன வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், தலைமுடி பாதிப்படைகிறது.…

மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று: ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்

Posted by - September 8, 2023 0
ராமேசுவரம்: தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன்…

தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted by - April 17, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர்…

கரு உருவாக்கும் கருவளர்ச்சேரி ..

Posted by - September 21, 2023 0
ஒரு பெண் கருவை சுமப்பதற்கு ஆதாரமாக திகழும் மூலத்தலமாக கரு வளர்ச்சேரி திகழ்கிறது கருவளர்ச்சேரிக்கு வரும்போது திருமணம் ஆன பெண்கள் தனியாக வருவதை தவிர்த்து கணவனுடன் வர…

பச்சை பட்டாணி.. வெண்டைக்காயைவிட பெஸ்ட்.. பச்சை பட்டாணியை சாப்பிடறீங்களா? அடேங்கப்பா.. இவ்ளோ இருக்கா?

Posted by - November 27, 2023 0
சென்னை: பச்சை பட்டாணியில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? பச்சை பட்டாணியை நிறைய சாப்பிடறீங்களா? அங்கே தான் பிரச்சனையே.. என்னன்னு பாருங்க. பொதுவாக, பச்சை காய்கறிகளும், பழங்களும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *