பச்சை பட்டாணி.. வெண்டைக்காயைவிட பெஸ்ட்.. பச்சை பட்டாணியை சாப்பிடறீங்களா? அடேங்கப்பா.. இவ்ளோ இருக்கா?

225 0

சென்னை:

பச்சை பட்டாணியில் உள்ள நன்மைகள் என்னென்ன தெரியுமா? பச்சை பட்டாணியை நிறைய சாப்பிடறீங்களா? அங்கே தான் பிரச்சனையே.. என்னன்னு பாருங்க.

பொதுவாக, பச்சை காய்கறிகளும், பழங்களும் நன்மைகளை தரக்கூடியவையே.. அந்தவகையில், பச்சை பட்டாணியும் தவிர்க்க முடியாதது.. காரணம், பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்துக்கள் நிறைய உள்ளன.. இந்த சத்துக்கள்தான், உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுப்பதுடன், உடல் எடையையும் அதிகமாகாமல் தடுத்து விடுகிறது..

சத்துக்கள்:

இந்த பட்டாணியில் வைட்டமின் A, B, C, E, K போன் சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்துமே, மனித நலனுக்கு பயன்படுபவை.. சர்க்கரை நோயாளிகளும் இதை ஓரளவு சாப்பிடலாம் என்கிறார்கள்.. காரணம், இந்த பட்டாணியின் கிளைசமிக் இன்டெக்ஸ் அளவு இதில் குறைவாகவே உள்ளது.பச்சை பட்டாணியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!!

இதிலுள்ள இரும்பு சத்தும், தாமிர சத்தும், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குகின்றன.. இதிலுள்ள பொட்டாசியம் சத்து, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.. இதனால் இதய ஆரோக்கியம் பேணப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.. எனவே, குறைந்த அளவு கலோரி கொண்ட பட்டாணிகள் உடல் எடை குறைப்பதற்கு தூண்டுகோலாக விளங்குகின்றன.

குழந்தைகள்:
உடல் எடையை குறைப்பதில் இந்த பட்டாணிக்கு பங்கு இருப்பதை போலவே, ஒல்லியாக இருப்பவர்கள் சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படவும் காரணமாக இருக்கிறதாம்..

அந்தவகையில், பலவீனம் குறைந்தவர்கள், உடல்பலம் பெற பட்டாணியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு இந்த பட்டாணியை உணவில் சேர்த்து தரலாம்.. வைட்டமின் K நிறைந்த பட்டாணியை சாப்பிடும்போது, குழந்தைகளின் புத்திக்கூர்மையும் அதிகமாகிறது.. வெண்டைக்காயைவிட 3 மடங்கு பாஸ்பரஸ், இந்த பட்டாணியில் உள்ளதால், மூளைளை திறன்பட செயல்பட வைக்கிறது. நினைவுத்திறனும் அதிகரிக்க செய்கிறது.

சரும வறட்சி:
சரும பாதுகாப்புக்கு கவசமாக திகழ்கிறது இந்த பட்டாணிகள்.. உணவில் அடிக்கடி பட்டாணி சாப்பிட்டு வந்தால், சருமம் பொலிவு பெறும்.. சரும வறட்சி அண்டாது.. கொலாஜின் உற்பத்தி அதிகமாகும்.. எலும்புகளின் உறுதிக்கும், செயல்பாட்டுக்கு ஆதாரமாக விளங்கும் கால்சியம், இந்த பச்சை பட்டாணியில் அதிகமதாகவே உள்ளது.. இதனால், எலும்பு சம்பந்தமான நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்கிறது.

ஆண்டி ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிற இந்த பட்டாணிகள்.. குறிப்பாக, வயிற்று புற்று நோய் செல்களை தாக்கி அழிக்கும் பண்புகள் இந்த பட்டாணிக்கு உண்டு.

நஞ்சு பட்டாணி:

ஆனால், அளவுக்கு மிஞ்சினால், பச்சை பட்டாணியும் நஞ்சுதான்.. ஏனென்றால், இந்த பட்டாணியில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. இது பெண்களுக்கு அவ்வளாக நல்லதில்லை.. உடலின் மூட்டுகளில் வலியையும், வீக்கத்தையும் உண்டுபண்ணிவிடும்.. எலும்புகளில் அமிலப்படிகங்களையும் உருவாக்கிவிடும்.

அதேபோல, நிறைய பட்டாணி சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.. வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.. அதேபோல, புரோட்டீன் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தின் செயல்பாடும் பாதிக்கும் என்கிறார்கள்.. இது சில சமயம், சிறுநீரக கற்களையும் ஏற்படுத்திவிடும்.

தவிர்க்க கூடாது:
பச்சை பட்டாணியிலுள்ள பைடிக் அமிலம், உடலிலுள்ள இரும்பு, கால்சியம், துத்தநாகம் போன்ற சத்துக்களையும் உறிஞ்சுகிறதாம். அதற்காக பச்சை பட்டாணியை முற்றிலும் தவிர்த்து விடக்கூடாது.. குறிப்பிட்டு அளவு மருத்துவரின் ஆலோசனையை பெற்று சாப்பிட்டு வரலாம்.

Related Post

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Posted by - October 7, 2024 0
வான் சாகச நிகழ்வை காண சென்ற 5 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பு என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள்- முழு விவரம் இதோ

Posted by - November 1, 2023 0
தீபாவளி ஸ்பெஷல் தொலைக்காட்சிகளில் எல்லா மாதங்களும் சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் போதும் படங்களாக ஒளிபரப்பி விடுவார்கள். அப்படி…

“திராவிட மாடல் ஆட்சி… மக்கள் விரோத ஆட்சி” – திமுகவை நேரடியாக சாடிய தவெக தலைவர் விஜய்!

Posted by - October 28, 2024 0
தவெக முதல் மாநில மாநாட்டில் தங்களின் அரசியல் எதிரி யார் என தவெக தலைவர் விஜய் பேசினார். தவெக மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி, வி சாலை…

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

Posted by - January 10, 2025 0
பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் சிறை…
aqwertyujkl

TVK VCK Alliance: சல்லிசல்லியாகும் திமுக கூட்டணி.! விசிக-வை கூட்டணிக்கு அழைத்த விஜய்.? வருவாரா திருமா.?

Posted by - May 6, 2026 0
தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு ஏற்கனவே காங்., சிபிஐ கட்சிளுக்கு அழைப்பு விடுத்த விஜய், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், திமுக கூட்டணியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *