செல்போனில் பேசியபோது “வெடிகுண்டு” என சொன்னதால் பயணி கைது: டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு

203 0

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் விமானம் நேற்று மாலை 4.55 மணியளவில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி செல்போனில் பேசும்போது வெடிகுண்டு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது, அருகில் இருந்த பெண் பயணியின் காதில் விழ, அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.A woman arrested delhi airport for smuggling Heroin worth 7 crore | World  News

விமான ஊழியர்கள், மத்திய தொழிலக பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். பாதுகாப்பு படையினர் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது. செல்போனில் பேசிய ஆண் பயணி, புகார் அளித்த பெண் பயணி இருவரும் கீழே இறக்கப்பட்டு, விமானம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை.

ஆனால் செல்போனில் பேசிய பயணி கைது செய்யப்பட்டு, விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். மற்ற பயணிகளுடன் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வேலை நிமித்தமாக துபாய்க்கு புறப்பட்ட பயணி தனது தாயுடன் தொலைபேசியில் பேசியபோது, அவரின் அருகில் அமர்ந்திருந்த பெண் பயணிக்கு அந்த உரையாடல் கேட்டுள்ளது. அப்போது, “வெடிகுண்டு இருக்கலாம் என்று பயந்து சிஐஎஸ்எப் வீரர்கள் தனது பையில் தேங்காயை அனுமதிக்கவில்லை, ஆனால் பையில் வைத்திருந்த பான் மசாலாவை கொண்டு செல்ல அனுமதித்தனர்” என பேசியிருக்கிறார். இதில் வெடிகுண்டு என்ற வார்த்தையை கேட்டதும் பெண் பயணி புகார் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

காதலியை கொன்று உடலை தொட்டியில் மறைத்த வாலிபர் – செல்போன் அழைப்புகள் மூலம் சிக்கினார்

Posted by - June 10, 2023 0
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மகேவா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண் ராஜ்கேசர் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு…

துணை ஜனாதிபதி தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

Posted by - August 20, 2025 0
புதுடில்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.15வது துணை ஜனாதிபதியை…

ரூ.10-க்கு ரீசார்ஜ் திட்டம்: டிராய் உத்தரவு!

Posted by - January 17, 2025 0
365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய பத்து ரூபாய் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருமாறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் இன்றளவும் 15 கோடி பேர்…

தலைநகரில் வேகமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 1,603 பேருக்கு தொற்று உறுதி

Posted by - April 21, 2023 0
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…

செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…

Posted by - August 15, 2024 0
Independence Day | நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *