டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

288 0

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார்.

டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் சிறு, குறு வாய்க்கால்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நீர்வளத்துறையின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் இன்று ஆய்வு செய்துவருகிறார். காலை 9 மணிக்கு தஞ்சையை அடுத்த ஆலக்குடி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலை முத்துவாரியில் தூர்வாரும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், விண்மங்கலத்தில் கால்வாய் சீரமைப்புப் பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர், செங்கரையூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.அதன்பின் வெள்ளனூரில் நந்தியார் கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு விட்டு விமானம் மூலம் இன்றிரவு சென்னை திரும்புகிறார்.

Related Post

அரசு வேலை கிடைக்காததால் விரக்தி: புதுச்சேரி சட்டசபைக்குள் சான்றிதழ்களை வீசிய விளையாட்டு வீரர் கைது

Posted by - August 9, 2023 0
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் சத்யராஜ் (வயது 29). பிளஸ்-2 வரை படித்துள்ள அவர், வலு தூக்கும் போட்டியில் மாநில…

பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை …

Posted by - May 11, 2023 0
மன்னார்குடி சட்டசபை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தி.மு.க. அரசு பதவியேற்ற 2 ஆண்டில் 3-வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை: தி.மு.க. அரசு…

ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி

Posted by - May 23, 2025 0
திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள தெய்வச்செயலுக்கு எதிராக புகார் அளிக்க, பாதிக்கப்பட்ட மாணவி ஆளுநர் மாளிகை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது திமுகவை சேர்ந்த முக்கிய…

2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில் பறந்த அந்த ஆர்டர்

Posted by - December 13, 2023 0
சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மிக்ஜாம் புயலால்…

வங்காளதேசம் அருகே மிதிலி புயல் கரையைக் கடந்தது: வானிலை மையம் தகவல்

Posted by - November 18, 2023 0
சென்னை: வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *