ஜிப்மரில் கணைய புற்று நோய்க்கு ‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சை- சிறு துவாரமிட்டு 10 மணி நேரம் செய்து சாதனை

196 0

புதுச்சேரி:

புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் இரைப்பைக்கு ரத்தம் கொண்டு செல்லும் ‘சீலியாக் ஆக்ஸிஸ்’ எனப்படும் ரத்த நாளத்தை பாதித்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து புற்று நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டது. 3 சுற்று சிகிச்சைக்கு பிறகு அவருக்கு புற்றுநோய் அளவு குறைந்தது. இருந்தபோதிலும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ரத்த நாளத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சைக்கு தொலைபேசி மூலம் அனுமதி பெறுவது வரும் 9-ம்  தேதி முதல் கட்டாயம்; செல்போன் செயலியிலும் பதியலாம் | JIPMER ...

இதைத்தொடர்ந்து டாக்டர்கள் கணையம், மண்ணீரல் மற்றும் சீலியாக் ஆக்ஸிஸ் ரத்த நாளம் ஆகியவற்றை எடுக்கும் அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தனர். பொதுவாக இந்த அறுவை சிகிச்சை 25 முதல் 30 செ.மீ. அளவுக்கு வயிற்று பகுதி கிழிக்கப்பட்டு திறந்த முறையில் (ஓபன் சர்ஜரி) செய்யப்படும். ஆனால், ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் கலையரசன் மற்றும் டாக்டர் பிஜூ போட்டாக் கட் தலைமையிலான குழுவினர் கணைய புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை ரோபோடிக் முறையில் 10 மணி நேரம் மேற்கொண்டனர். அதாவது, சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர். சிகிச்சை முடிந்த 6-வது நாள் பெண் நோயாளி முழுவதுமாக குணமாகி வீடு திரும்பினார்.

‘ரோபோடிக்’ அறுவை சிகிச்சையில் குடலியல் அறுவை சிகிச்சை துறை முன்னோடியாக திகழ்வதாகவும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை உலகில் சிலமருத்துவ மனைகளில் மட்டுமே செய்யப்படுவதாகவும் ஜிப்மர் இயக்குனர்ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ரோபோடிக் முறையில் இதர புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகள் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டவை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் கூறினார்.

Related Post

வெந்தயக்கீரை.. மளமளன்னு உடல் சதை கரையணுமா? சர்க்கரை நோயாளிகள் வெந்தயக்கீரையை மட்டும் விட்றாதீங்க

Posted by - August 30, 2023 0
சென்னை: வெந்தயக்கீரை மட்டுமல்ல, இந்த செடியின் விதைகள், தண்டுகள் என அனைத்துமே மருத்துவமும், மகத்துவமும் நிறைந்தவையாகும். இந்த கீரையின் விதைகளின் கருவில் காலக்டோமன்னை காணப்படுகிறது. இளம் விதைகளில்…

மன்னார் வளைகுடா கடலில் சூறைக்காற்று: ராமேசுவரத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்

Posted by - September 8, 2023 0
ராமேசுவரம்: தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன்…

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…

கடலூரில் “அந்தரத்தில்” தொங்குச்சாமே.. மிட்நைட்டில் ஊசலாடிய 40 உயிர்கள்.. கண்விழித்து பார்த்தால்???

Posted by - September 26, 2023 0
கடலூர்: அரசு பஸ் ஒன்று அந்தரத்தில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, கடலூரே அதிர்ந்து போய்விட்டது.. என்ன நடந்தது நள்ளிரவில்? சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு விரைவு…

இனிமே அதெல்லாம் நடக்காது.. நடக்கவிடப்போறது இல்ல.. அடித்துப் பேசிய தவெக தலைவர் விஜய்!

Posted by - April 26, 2025 0
இதற்கு முன்பு பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்திருக்கலாம். இனிமேல் அதுபோல நடக்காது என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முகவர்கள் கருத்தரங்க கூட்டம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *