டூத் பிரஷை மாதக்கணக்கில் உபயோகிப்பவரா நீங்கள்… இதை தெரிஞ்சிக்கோங்க

158 0
  • பிரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அதிலிருக்கும் இழைகள் அதன் வடிவத்தை இழந்துவிடும்.
  • குழந்தைகள் அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவார்கள் என்பதால் அவர்களின் பிரஷ் இழைகள் வேகமாக தேய்ந்துவிடும்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பல் துலக்கும் பழக்கத்தைத்தான் அனைவரும் பின்பற்றுவோம். வாய் சுகாதாரத்தை பராமரிப்பதற்கு பல் துலக்குவது அவசியமானது. ஆனால் பல் துலக்குவதில் காட்டும் ஆர்வத்தை பலரும் பிரஷ் விஷயத்தில் காண்பிப்பதில்லை. நிறைய பேர் பிரஷை மாதக்கணக்கில் உபயோகிப்பார்கள். அதில் இருக்கும் இழைகள் தேய்ந்து போகும் வரை உபயோகிப்பவர்களும் இருக்கிறார்கள்.பல் மருத்துவர்களின் கருத்துப்படி, மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். பிரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அதிலிருக்கும் இழைகள் அதன் வடிவத்தை இழந்துவிடும். தேய்ந்தோ, உடைந்தோ போய்விடும். அதனை பயன்படுத்தினால் பற்களுக்கு இடையே இருக்கும் உணவுத்துகள்களை அகற்றும் செயல்திறன் குறைந்து போகும். ஈறுகளுக்கும் சேதம் ஏற்படுத்தும். ஏனென்றால் பிரெஷில் இருக்கும் இழைகள் நேராக, தொய்வடையாமல் இருந்தால்தான் பற்களுக்கு இடையேயும், ஈறு பகுதிகளிலும் சிறப்பாக செயல்படும். பழைய இழைகள் ஈறுகளை பாதுகாப்பதற்கு பதிலாக எரிச்சலடைய செய்யும்.

அத்துடன் பழைய இழைகளில் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் பூஞ்சை காளான்கள் படியக்கூடும். அவை வாய்வழி சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். பற்களில் கிருமிகள் பெருக காரணமாகி ஈறுகளை சிதைக்கக்கூடும். பிரஷ் இழைகள் தேய்ந்தாலோ, சேதம் அடைந்தாலோ 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. உடனே மாற்றிவிடுவதுதான் பற்களுக்கு பாதுகாப்பானது.

குறிப்பாக குழந்தைகள் அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவார்கள் என்பதால் அவர்களின் பிரஷ் இழைகள் வேகமாக தேய்ந்துவிடும். பிரஷ்களை மூடிய நிலையில் வைக்கக்கூடாது. ஏனெனில் ஈரப்பதம் பாக்டீரியா, வைரஸ் படிவதற்கு காரணமாகிவிடும். காற்றோட்ட சூழல்தான் சிறந்தது.

Related Post

மாருதி ‘இவிதாரா‘வோட விலை இவ்ளோதானா.!

Posted by - February 17, 2026 0
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசூகியின் இவிதாரா காரின் விலை வெளியாகியுள்ளது. பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் ஆப்ஷனுடன் குறைந்த விலையில் இவிதாரா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தொடக்க விலை மற்றும் வேரியன்ட்டுகள்…

சளி, இருமலால் தொல்லையா? அப்போ நண்டு ரசம் செய்து சாப்பிடுங்க!

Posted by - February 24, 2023 0
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் ரசம் இன்றியமையாத ஒரு இடத்தை பெற்று இருக்கும். ரசமானது நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்கு மிகவும் உதவுகிறது. காய்ச்சல்,சளி,…

Bigg Boss 9 வீட்டில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது!

Posted by - January 3, 2026 0
‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்கின் போது கம்ருதீன் மற்றும் பாரு இடையே ஏற்பட்ட மோதல் பார்வையாளர்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மேலும் சாண்ட்ராவை காரிலிருந்து தள்ளிய சம்பவம்…

சிங்கப்பெண்ணில் அன்பு-ஆனந்திக்காக களம் இறங்கும் லலிதா-மனோன்மணி.. சூழ்ச்சியை ஆரம்பிக்கும் பார்வதி-மித்ரா!

Posted by - February 25, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்திக்கு யார் தான் உதவி செய்யப் போகிறார் என்ற சந்தேகம்…

அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால்?அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

Posted by - January 29, 2024 0
நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இன்றைய துரிதமான உலகில் உணவுப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *