அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால்?அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

362 0

நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

இன்றைய துரிதமான உலகில் உணவுப் பழக்கம் மற்றும் தூக்கம் போன்றவை மோசமானதாக இருக்கிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் இந்த பழக்கங்களை முறையாக பின்பற்றுவதில்லை. ஆரோக்கியமான உணவுகளை தவிர்ப்பது, சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது என்று பல தவறுகளை செய்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் கார்பனேடட் பானங்கள் அல்லது காஃபின் பானங்கள் போன்றவற்றை அருந்துகின்றனர். இது தங்களுக்கு உடனடி ஆற்றலை தருவதாக இளைஞர்கள் கருதுகின்றனர். இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இது நன்மையை தராது.

கார்பனேடட் பானங்களை அருந்துவதன் மூலமாக நம் உடலில் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன.

அதிக காஃபின் கொண்ட பானம் ஒன்றை அருந்தும்போது அதன் பாதிப்புகள் சில நிமிடங்கள் தொடங்கி, பல நாட்கள் வரையிலும் கூட நீடிக்கும். சராசரியாக ஒரு 500 மில்லி கொண்ட குளிர்பானத்தில் 160-200 mg அளவில் காஃபின் அளவு இருக்கும். இது நாம் அருந்துகின்ற ஒரு கப் காஃபியை காட்டிலும் கூடுதலாகும்.

நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். பானம் அருந்திய அடுத்த 15 முதல் 45 நிமிடங்களில் ரத்த நாளங்களில் காஃபின் அளவு மிகுதியாக இருக்கும். அத்தகைய சூழலில் நம்முடைய எச்சரிக்கை உணர்வு மற்றும் சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.

பானம் அருந்திய 30 முதல் 50 நிமிடங்களுக்குப் பிறகு நமது ரத்த நாளங்கள் காஃபினை முழுமையாக உறிஞ்சிக் கொள்ளும். அதனால் நம்முடைய ரத்த நாளங்களில் சர்க்கரை மிகுதியாக இருக்கும். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காஃபின் அளவுகள் குறையும் என்றாலும், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் என்பது மறையாது.

தோராயமாக காஃபின் பானம் அருந்திய 5 முதல் 6 மணி நேரத்திற்குப் பிறகு, நமது உடல் அதில் பாதி அளவை மட்டுமே வெளியேற்றியிருக்கும். எனினும், நம்முடைய வயது மற்றும் உடல்நிலை போன்றவற்றின் அடிப்படையில் இது மாறும். இறுதியாக 12 மணி நேர முடிவில் காஃபின் தன்மை உடலில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்.

காஃபின் பானம் அருந்திய பிறகு 12 முதல் 24 மணி நேர இடைவெளிக்குள் உங்களுக்கு தலைவலி, எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் உருவாகலாம். காஃபின் பாதிப்புகள் முற்றிலுமாக நீங்குவதற்கு தோராயமாக 7 முதல் 12 நாட்கள் ஆகலாம். ஆக, அடுத்தமுறை காஃபின் பானம் அருந்துகின்ற எண்ணம் தோன்றும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள்.

Related Post

2025-ல் Electric Bike வாங்கலாமா? Mileage, Battery Cost, Charging Time… Experts சொல்லும் உண்மையான தகவல்கள்!

Posted by - December 12, 2025 0
சென்னை: 2025-ஐ enter பண்ணியதும் India முழுக்க electric bike (EV) market வேகமா வளர்ந்து கொண்டே இருக்கு. ஆனா இன்னும் பெரும்பாலோருக்கு ஒரே சந்தேகம் –…

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் அடுத்து வரும் மாற்றம்! முடியப்போகிறதா?

Posted by - September 4, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒருகாலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் கதையில் பரபரப்பு குறைந்ததால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரேட்டிங்…

செல்டவருக்கு ரூ.7500 கோடி நிலுவைத்தொகை… வங்கிகளில் கடன் கேட்டு அலையும் Vi நிறுவனம்!

Posted by - January 7, 2023 0
அறிக்கையின்படி, Vi நிறுவனம்  Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Vi ,…

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?… வெளிவந்த புரொமோ

Posted by - February 2, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவியில் பெண்கள் எழுச்சிக்கான கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கதைக்களம்…

புத்தம் புதிய சீரியலை ஒளிபரப்பும் விஜய் டிவி!

Posted by - April 18, 2023 0
 சுரேஷ் சண்முகம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘அரண்மனை கிளி, தாழம்பூ ஆகிய சீரியல்களை இயக்கியவர். ’மோதலும் காதலும்’ என்ற புதிய தமிழ் சீரியலை ஏப்ரல் 24-ம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *