தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு!

198 0

Ops eps case | அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

இதேபோன்று எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி குமரேஷ் பாபு, அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

இதன்மூலம், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால், ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது மற்றும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடை நீங்கியது. இதனிடையே, அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முறையிடப்பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்

Related Post

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கணுமா? அப்ப இந்த ஆரோக்கியமான உணவுகளை குறைவாக சாப்பிடுங்க…!

Posted by - October 25, 2023 0
சிறுநீரக கற்கள், அல்லது சிறுநீரக கால்குலி, சிறுநீரகங்களில் உருவாகக்கூடிய வலிமிகுந்த கனிம குவிதல் ஆகும். கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சிறுநீரில் உள்ள சில…

“ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்” – துணை முதல்வர் தொடர்பான கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் சூசகம்?

Posted by - September 24, 2024 0
திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், “உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்’’ என…

3 பேரின் பதவி பறிப்பு – காரணம் என்ன..?

Posted by - September 30, 2024 0
தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி…

தவெக – பாமக கூட்டணி? துணை முதல்வர் அன்புமணி ! விஜய் பக்கா ஸ்கெட்ச்

Posted by - April 21, 2025 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தேர்தலை சந்தித்த பாமக, இந்த முறை தவெக உடன் கூட்டணி அமைக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும்…

இம்மாதம் அதிக குளிர்: குளிர் குறைக்க எளிய முறைகள்..

Posted by - December 20, 2025 0
இந்த டிசம்பர் அதிக குளிர் காரணமாக உங்கள் உடல் பாதுகாப்புக்கு எளிய வீட்டுக்கூடும் வழிகள், உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி முறைகள். இப்போது குளிர் பாதிப்பை குறைக்க…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *