தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… வானிலை மையம் அப்டேட் !

234 0

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது.

அதேநேரம் அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாகவும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலையாக  ஈரோட்டில் 39.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மழை நிலவரம் :

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இன்றைய அதிகபட்ச வெப்பநிலை :

அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியே இருக்கும் எனவும் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா – தென்தமிழக கடலோரப்பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Post

ரம்ஜான் பண்டிகை எப்போது..? தலைமை ஹாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Posted by - April 10, 2024 0
ரம்ஜான் பண்டிகை தேதி குறித்த முக்கிய அறிவிப்பை அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளதார். ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு…

பிடிஆர்-க்கே இந்த நிலைமையா? சட்டசபைக்கு வந்த சங்கதி? தேர்தல் நேரத்தில் ஸ்டாலினுக்கு புது தலைவலி?

Posted by - April 22, 2025 0
சட்டசபையில் இன்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதால் திமுக-வின் உட்கட்சி மோதல் அம்பலமாகியுள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.…

விசிக எதிர்ப்பால் பாஜக கொடிகள் அகற்றம் @ கும்பகோணம் மகாமக குளக்கரை – நடந்தது என்ன?

Posted by - December 26, 2023 0
#kumbakonam #tnbjp #vck #annamalai #enmanenmakkal #dmk #pixeltv#pixelmedia கட்சி கொடிகள் அகற்றப்பட்ட மகாமக குளக்கரைப் பகுதி கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பால் பாஜக கொடிகள்…

தமிழகத்தில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Posted by - November 8, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமாகி பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *