தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு…

357 0

வரும் 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பாக ஒருநாள் மதிய உணவு வழங்க உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘உலகம் முழுவதும் மே 28-ஆம் தேதி அன்று “உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

“தளபதி” அவர்களின் சொல்லுக்கினங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி எனும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் வருகின்ற 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுமேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “பட்டினி தினத்தை* முன்னிட்டு ஒரு நாள் (மதிய) உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்றவரை உணவளித்து பசியினை போக்கும் விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” இந்த நலப்பணி செய்யப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து – திமுக அறிவிப்பு

Posted by - June 3, 2023 0
கலைஞரின் 100-ஆவது பிறந்தநாள் தொடர்பாக இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக திமுக தலைமை…

காதல் திருமணம் செய்த 2-வது நாளில் தாலியை கழற்றி கொடுத்து விட்டு உறவினர்களுடன் சென்ற இளம்பெண்

Posted by - July 4, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்ரவர்த்தி (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…

முழங்கால் வலி இருக்கா? கற்பூரவள்ளி ஒன்னு போதுமே.. மூட்டு வலியை விரட்டியடிக்கும் 10 டிப்ஸ்கள் பாருங்க

Posted by - December 20, 2023 0
சென்னை: பாடாய் படுத்தும் முழங்கால் வலி, மூட்டுவலிக்கு எளிய முறையிலேயே நிவாரணம் தேடலாம்.. அந்தவகையில், வீட்டிலிருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே, தீர்வை காணலாம். முழங்கால் வலி, மூட்டுவலிகளுக்கு…

இந்திக்கு 3 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒருநாள்: CBSE 10-ம் வகுப்பு தேர்வில் கூட மொழி வேறுபாடா?- அன்புமணி கண்டனம்

Posted by - November 4, 2025 0
இந்தி தேர்வுக்கு முன்னும், பின்பும் 2 மற்றும் 4 நாட்கள் இடைவெளியில் உள்ளது. தமிழ் தேர்வுக்கு முன்னும், பின்பும் ஒரேயொரு நாள் மட்டுமே இடைவெளி உள்ளது.பா.ம.க. தலைவர்…

2023: ரத்னவேலு முதல் ஜாக்கி பாண்டியன் வரை – நடிப்பால் வசீகரித்த வில்லத்தனங்கள்!

Posted by - December 27, 2023 0
எல்லா கதைகளும் பிரச்சினைகளாலும் அதனை உருவாக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களாலும் மட்டுமே சுவாரஸ்யம் பெறுகின்றன. ‘ஹீரோ’வை ஹீரோவாக்குவதே பலமான வில்லன் கதாபாத்திரம்தான். அவர்களின் அழுத்தமான நடிப்பு பிரச்சினையின் தீவிரத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *