காதல் திருமணம் செய்த 2-வது நாளில் தாலியை கழற்றி கொடுத்து விட்டு உறவினர்களுடன் சென்ற இளம்பெண்

439 0

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அருண் சக்ரவர்த்தி (வயது 28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அருண் சக்ரவர்த்திக்கு வடக்கிப்பாளையம் அருகே உள்ள கொங்கநாட்டன்புதூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர்.Marriage Certificate – Procedure, Application & Sample Form

காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 1-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் ஆச்சிப்பட்டியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். திடீரென மாயமானதால் அவர்களின் பெற்றோர் மாயமானவர்களை கண்டுபிடித்து தரும்படி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த திருமணம் செய்து கொண்ட காதலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை அருண் சக்ரவர்த்தியுடன் அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் இளம்பெண்ணை அவரது உறவினர்கள் சிலர் சந்தித்தனர்.

அப்போது வீணாக வாழ்க்கையை தொலைத்து விடாதே, எங்களுடன் வந்து விடு என ஆலோசனை வழங்கினர். அவர்களின் பேச்சை கேட்ட இளம்பெண் அருண் சக்ரவர்த்தி கட்டிய தாலியை கழற்றி கொடுத்து விட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார். திருமணம் செய்த காதலி தாலியை கழற்றி கொடுத்து விட்டு சென்றதால் மனவேதனை அடைந்த அருண் சக்ரவர்த்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.

சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக அருண் சக்ரவர்த்தியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Post

Mohan G Arrest: பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைப் பேச்சு.. இயக்குநர் மோகன் ஜி கைது!

Posted by - September 24, 2024 0
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் மோகன் ஜி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீது…

திருவாரூர், நாகையில் திடீர் மழை – விவசாயிகள் கவலை

Posted by - February 28, 2023 0
நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள்…

அருகம்புல்.. அனைத்து நோயை ஓட்டும் ஒரே மருந்து.. வெறும் வயிற்றில் அருகம்புல்லின் ஜூஸ் போதுமே.. அருமை

Posted by - January 6, 2024 0
சென்னை: எல்லா விதமான நோய்களுக்கும் ஏற்ற மருந்து ஒன்று இருக்கிறதென்றால் அதுவும் இந்த அருகம்புல்தான்.. அத்தனையும் மருத்துவம்.. அத்தனையும் மகத்துவம்..!! வெறும் புல்தானே என்று இதை நினைத்து…

“தளபதி டிவி”.. விஜயகாந்த் சேனலை வாங்கும் விஜய்! சுளீர் பிளான்! என்ன நடக்குது?

Posted by - February 9, 2024 0
சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய சேனல் தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக இரண்டு திட்டங்களை அவர் கையில் எடுத்துள்ளாராம். நடிகர் விஜய் லோக்சபா…

கிரிப்டோகரன்சி விளம்பரம்.. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக்

Posted by - January 1, 2023 0
நேற்று இரவு 1:30 மணி அளவில் இந்த அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பு நிறுவனமான TNDIPR டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *