தமிழ்நாடு முழுவதும் பால், தயிர் விலை உயர்வு.. இன்று முதல் அமல்

283 0

ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

தமிழகத்தில் தனியார் பாலின் விலை லிட்டருக்கு ரூ 2 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அரசின் ஆவின் நிறுவனத்தின் பால் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டு உள்ளன. ஆவின் பாலிற்கும், தனியார் பாலிற்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருந்து வருவதால் ஆவின் பால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது. கடந்த ஆண்டு 4 முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பால் விலையை உயர்த்தி உள்ளன. இந்த நிறுவனங்கள் பால், தயிர் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து தனியார் பால் நிறுவனங்கள் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் உற்பத்தி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தால் பால் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி தனியார் பால் விலை 3 வகையாக பிரித்து உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.50-ல் இருந்து ரூ.52 ஆக உயருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.62-ல் இருந்து ரூ.64 ஆகவும் உயர்கிறது. ஆவினில் இந்த பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்கப்படுகிறது. நிறை கொழுப்பு பால் ரூ.70-ல் இருந்து ரூ.72 ஆக அதிகரிக்கிறது. ஆவினில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல தயிர் லிட்டர் ரூ.72-ல் இருந்து ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: ஆன்லைனில் நூதன மோசடி

Posted by - September 8, 2023 0
புதுச்சேரி: வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு…

ஆசிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர்; தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

Posted by - September 12, 2025 0
TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். TET…

சரணடையும் நாளிலேயே ஜாமினை பரிசீலிக்க வேண்டும் – திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மனுவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted by - January 25, 2024 0
சரணடையும் நாளில் இருந்து ஜாமின் வழங்க பரிசீலிக்க வேண்டும் என எம்எல்ஏ இ.கருணாநிதியின் மகன், மருமகளும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.…

BBTamil 8 Eviction: விஜய் சேதுபதியை காப்பாற்ற பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்? டபுள் எவிக்ஷனில் நடந்த ட்விஸ்ட்!

Posted by - December 9, 2024 0
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8: விஜய்…

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *