ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி… ஓபிஎஸ் அறிவிப்பு

312 0

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமாகா போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிட விட்டுக்கொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் – அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. அதிமுகவில் தனி அணியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இடைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டால் தேசிய கட்சி என்பதன் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு ஆதரிப்போம். இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு காரணமாக இருக்கமாட்டேன்.

தேர்தல் ஆணைய ஆவணங்களின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். பி படிவத்தில் கையெழுத்திட தயாராகவே இருக்கிறேன்.  இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த எங்களுக்கே முழு உரிமை உள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று அறிவித்தார்.

Related Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Posted by - September 2, 2024 0
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து சுவாமி, அம்பாள்…

மெட்ரோ ரெயில் பணி: ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted by - February 21, 2023 0
திருப்போரூர்: சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில்…
Generated Image November 22 2025 5 37PM

10 மாவட்டங்களுக்கு இன்றும் டேஞ்சர்.! எந்த எந்த பகுதி தெரியுமா.? வெதர்மேன் விடுத்த அலர்ட்

Posted by - November 24, 2025 0
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடு – வைரலாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ட்வீட்..!!

Posted by - October 10, 2024 0
தங்கள் உரிமை கேட்டுப் போராடும் சாம்சங் தொழிலாளர்களை போராட விடுங்கள் என பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்தியில்…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வருக்கு செந்தில் பாலாஜி உருக்கமான கடிதம் …

Posted by - February 13, 2024 0
சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *