தலைவலி, உடல்வலி என எதற்கெடுத்தாலும் பாராசிட்டமால் மாத்திரை எடுத்து கொள்பவரா நீங்கள்? பகீர் கிளப்பும் ஆய்வு முடிவு.!

302 0

பராசிட்டமால் என்பது ஆன்டிபிரைடிக் மருந்தாகும். பொதுவாக வலி நிவாரணி மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாக உதவும் பாராசிட்டமாலை அளவுக்கு அதிகமாக அல்லது நீண்ட காலம் எடுத்து கொள்ளும் போது அது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.

பெரும்பாலும் நம்முடைய அனைவரது வீடுகளிலும் இருக்கும் ஒரு முக்கிய மாத்திரையாக பாராசிட்டமால் மாத்திரைகள் உள்ளன. கடுமையான உடல்வலி இருந்தாலோ அல்லது தலைவலித்தாலோ, காய்ச்சல் அடித்தாலோ அல்லது வருவது போன்ற அறிகுறிகள் தென்பட்டாலோ டாக்டரிடம் செல்லாமல் நாமே மெடிக்கலுக்கு சென்று பாராசிட்டமால் வாங்கி போட்டு கொள்ளும் பழக்கம் நம்மிடையே உள்ளது.

பாராசிட்டமால் மாத்திரைகள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் நம்பகமான மருந்துகளில் ஒன்றாகவும், மிகவும் பொதுவான வலி நிவாரணிகளில் ஒன்றாகவும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த மாத்திரைகளை எடுத்து கொள்வதால் ஏற்படும் கடும் பக்கவிளைவுகள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

சமீபத்தில் எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் பாராசிட்டமால் நம் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அதன் பக்கவிளைவுகள் கடுமையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. பாராசிட்டமால் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் குறித்து அறிய எலிகளை கொண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் பிரபலமான வலி நிவாரணி கல்லீரலை எவ்வாறு சேதப்படுத்துகிறது என்பது பற்றிய புதிய தகவல் தெரியவந்துள்ளது.

எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனித மற்றும் எலி திசுக்களில் உள்ள கல்லீரல் செல்களை (liver cells) பாராசிட்டமால் எவ்வாறு பாதித்தது என்பதை ஆய்வு செய்தனர். ஆய்வில் சில சூழ்நிலைகளில், கல்லீரலில் உள்ள neighbouring செல்களின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான ஸ்ட்ரக்ச்சரல் ஜங்க்ஷன்களில் (structural junctions) குறுக்கிடுவதன் மூலம் கல்லீரலை சேதப்படுத்தும் என்பது தெரிய வந்தது.

இதனிடையே கடந்த 2006-ஆம் ஆண்டில், BMJ இதழில் வெளியான ஒரு ஆய்வு UK-வில் கடுமையான கல்லீரல் செயலிழப்பு பாதிப்புகள் அதிகம் பதிவாக மிகவும் பொதுவான காரணமாக வலி நிவாரணியான பாராசிட்டமாலின் (அசெட்டமினோஃபென்) அளவுக்கதிகமான நுகர்வு குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவில் பதிவாகும் கடும் கல்லீரல் செயலிழப்பு பாதிப்புகளுக்கும் பாராசிட்டமாலின் நச்சுத்தன்மையே மிகப்பெரிய காரணம் என்றும் அது கண்டறிந்துள்ளது.

மார்ச் 2023-ல் நேச்சரில் வெளியான ஒரு ஆய்வில் மாத்திரைகளின் ஆக்டிவ் இன்கிரிடியன்ட்ஸை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அமெரிக்க அரசின் உத்தரவிற்கு பிறகு, பாராசிட்டமால்-ஓபியாய்டு வலி நிவாரணிகளுடன் தொடர்புடைய கடும் கல்லீரல் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.

அதிகமாக எடுத்து கொள்ளும் போது தான் பாராசிட்டமால் ஆபத்தாகிறது…

பராசிட்டமால் என்பது ஆன்டிபிரைடிக் மருந்தாகும். பொதுவாக வலி நிவாரணி மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாக உதவும் பாராசிட்டமாலை அளவுக்கு அதிகமாக அல்லது நீண்ட காலம் எடுத்து கொள்ளும் போது அது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.குருகிராமில் இருக்கும் Marengo Asia Hospitals-ஐ சேர்ந்த டாக்டர். விபோர் பரீக் பேசுகையில், மருந்தால் தூண்டப்பட்ட கல்லீரல் காயம் (DILI – drug-induced liver injury) என்பது கடும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட ஒரு பொதுவான காரணமாகும்.

தேவையான டோஸிற்கு மேல் அதிகமாக எடுத்து கொள்வதால் கல்லீரல் நச்சுத்தன்மை ஏற்படும் என குறிப்பிட்டார். பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டி அதிகம் எடுப்பது, நிபுணரின் அறிவுரையின்றி நீண்டநாட்கள் எடுத்து கொள்வது, மது அருந்துதல், அடிப்படை கல்லீரல் நிலைமைகள் மற்றும் சில medication interactions போன்ற காரணிகள் பாராசிட்டமாலால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பை அதிகரிப்பதாக குறிப்பிடுகிறார்.

மற்றொரு மருத்துவரான டாக்டர் ஹர்ஷ் கபூர் பேசுகையில், பாராசிட்டமால் மூலம் கல்லீரலில் காயம் ஏற்படுவதில்லை.மாறாக இது N-acetyl-p benzo quinolone amine என்பதன் குறுகிய வடிவமான NAPQI எனப்படும் பாராசிட்டமால் சிதைவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் வளர்சிதை மாற்றங்களால் ஏற்படுகிறது என்று விளக்கமளித்துள்ளார். NAPQI-ஆனது கல்லீரலின் glutathione குறைப்பதோடு, கல்லீரலில் உள்ள செல்களை நேரடியாக சேதப்படுத்துகிறது. மருந்து எடுத்து கொண்ட பிறகு ஒரு குறிப்பிட்ட நேரத்தில், பாராசிட்டமாலின் ரத்த அளவை அடிப்படையாகக் கொண்டது நோயறிதல் என்கிறார்.

Related Post

சூர்யா ஒரு பயங்கரமான நபர், அவரது காலம் முடிந்துவிட்டது- பிரபல நடிகர் ஓபன் டாக்

Posted by - December 1, 2023 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் சில முக்கியமான படங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று என்ற படம் அவரின் சினிமா பயணத்தில்…

10 கிலோ வரை குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?

Posted by - June 9, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி. அவர் நன்றாக பாடல் படி வந்தாலும் இறுதிக்கட்டத்தை எட்ட முடியவில்லை,…

குக் வித் கோமாளி இதுதான் கடைசி சீசனா.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

Posted by - July 31, 2023 0
விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த காமெடி கலந்த குக்கிங் ஷோ எக்கச்சக்க ரசிகர்களை கொண்டிருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.…

ஓவியா மது குடித்துக்கொண்டே சொன்ன அட்வைஸ்! என்னனு பாருங்க

Posted by - July 29, 2024 0
நடிகை ஓவியா ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவில் பாப்புலர் ஆனது தான் அதிகம். ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு…

முந்தானைமுடுச்சு பாக்யராஜ் கையில் இருக்கும் குழந்தை இந்த சீரியல் நடிகை தானா?

Posted by - March 4, 2023 0
முந்தானை முடிச்சு பாக்யராஜ் – ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த படம் தான் முந்தானை முடிச்சு. மிக்பெரிய அளவில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. முந்தானை முடிச்சு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *