தவெக மாநாடு ஏற்பாட்டில் ஒப்பந்ததாரர் கைவிரிப்பு: அரசியல் அழுத்தமே காரணம்!

90 0

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டில் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக ஒப்பந்ததாரர்கள் தீடிரென கைவிரித்தனர். இதனால், கேரளாவில் இருந்து இருக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தவெக 2- ஆவது மாநில மாநாடு

மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2- ஆவது மாநில மாநாடு நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அதிக அளவிலான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வருகை தர உள்ள நிலையில், அவர்களுக்கான இருக்கைகள், குடிநீர், கழிப்பறை, அவசர மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டுக்கு சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் அமைக்கும் பணி

அதன்படி, மாநாடு நடைபெறும் இடத்தில் ஒவ்வொரு பகுதியாக பிரிக்கப்பட்டு அதில், 2, 500 இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகத்தை சேர்ந்த 5 நிறுவனங்களிடம் இருக்கைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதில், குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே நாற்காலிகள் வழங்கி உள்ளன. மற்ற நிறுவனங்கள் கடைசி நேரத்தில் நாற்காலிகள் வழங்க முடியவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

கேரள மாநிலத்தில் இருந்து 50 ஆயிரத்துக்கு மேல்…

இதைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் மதுரை மாவட்டம், பாரபத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 1. 50 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ள நிலையில், அதையும் தாண்டி பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் குவிந்தால் அவர்கள் நின்று கொண்டு மாநாட்டை பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றி கழக மாநாடு நடைபெறுவதில் பல்வேறு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அரசியல் அழுத்தம் காரணமாகவே கடைசி நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒப்பந்த நிறுவனங்கள் இருக்கைகள் தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Post

“புலம்பெயர் பிகார் மக்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக இங்கே வாக்களிக்க முடியும்” – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted by - August 4, 2025 0
புலம்பெயர்ந்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக அங்கீகரிப்பது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்த பிகார் மாநிலத்தவர்கள், தமிழ்நாட்டு வாக்காளர்களாக,…

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது” – பிரதமர் மோடி

Posted by - January 23, 2026 0
“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Posted by - March 20, 2026 0
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள…

”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

Posted by - October 31, 2025 0
நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, பிரதமர் மோடி மறந்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். MK Stalin ON PM Modi: பிரதமர் மோடி…

டெல்லியில் அமித் ஷாவுடன் இபிஎஸ் ஆலோசனை

Posted by - September 17, 2025 0
சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *