திருமண தடை நீக்கும் கருங்காலி மாலை

364 0

செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் இந்த மாலையை அணியலாம். அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும். ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றி பாளையம் பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி, பொதுமக்களின் தொழில் வளர்ச்சி, குடும்ப நிம்மதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார். இவர் கருங்காலி மாலைகள் குறித்த அரிய தகவல்களை கூறி அதை பக்தர்களுக்கு அளித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:- நம் வாழ்வில் மகத்தான மகிழ்ச்சியை கொண்டு வர நவக்கிரக நாயகரான செவ்வாய் பகவானின் ஆசீர்வாதம் மிக முக்கியம். அவரது ஆசீர்வாதத்தை பெற விரும்புபவர்கள் கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் பகவானுக்கு உரிய இந்த கருங்காலி மாலை அணிபவர்களுக்கு செவ்வாய் பகவான் அளிக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும்.

மேலும் எந்தவிதமான பிரச்சினைகளையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்களாக விளங்குவார்கள், மன உறுதி அதிகமாவதுடன், உடல் பிரச்சினைகள் நீங்கும். குலதெய்வ அருள் பெருகும். செல்வவளம் அதிகமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும். மாங்கல்ய பலம் பலப்படும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்தால் தோஷம் நீங்குவதுடன், திருமண தடை நீங்கும். கணவன்-மனைவிக்குள் பிரச்சினைகள் இருந்தால் அந்த பிரச்சினைகள் அகன்று கணவன்-மனைவி உறவு மேம்படும். பைரவ பீடத்தில் கருங்காலி மாலைகள் முறைப்படி பூஜை செய்யப்பட்டு, மந்திரங்களால் உரு ஏற்றி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அணிந்து கொண்டால் தொழில் வளர்ச்சி அடையும். பொருளாதாரம் முன்னேற்றம் பெறும். இவ்வாறு பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி கூறினார்

Related Post

சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா- மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?

Posted by - September 29, 2023 0
நயன்தாரா அஜித் எப்படி தனது சினிமா பயணத்தில் தனி பாதையை அமைத்து செயல்பட்டு வருகிறாரோ அதேபோல் தான் நடிகை நயன்தாரா. சினிமாவில் ஒரு படம் நடித்தால் வழக்கமாக…

முட்டை சமைக்கப் போறீங்களா? இந்த பொருட்களை சேர்த்து சமையுங்க… சுவையோட ஆரோக்கியமும் கிடைக்கும்…!

Posted by - October 16, 2023 0
முட்டைகள் அவற்றின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக உலகம் முழுவதும் உண்ணப்படும் மிகச்சிறந்த உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அவை புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும் மற்றும்…

டாட்டூ குத்துற இடமா இது.. அபிராமி வெங்கடாசலத்தின் இரண்டு புது டாட்டூஸ்

Posted by - February 20, 2023 0
  அபிராமி வெங்கடாசலம் மாடலிங் துறையில் ஜொலித்துவந்த அபிராமி வெங்கடாசலம், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். அவர் அதன்…

வள்ளலார் கூறிய உணவு முறைகள் பற்றி தெரியுமா?

Posted by - March 14, 2023 0
நாம் எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று அன்றே ஆச்சரியமூட்டும் பலவித தகவல்களை வள்ளலார் கூறியுள்ளார். நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி…

பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?

Posted by - July 25, 2023 0
பிக் பாஸ் 7 விஜய் டிவியில் பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *