திருமணம் செய்ய வற்புறுத்தியதால் லாரியில் தள்ளி இளம்பெண் கொலை- காதலன் கைது

218 0

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஐதராபாத்தில் பச்சுப்பள்ளிக்கு வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் பச்சுப்பள்ளியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஏப்ரல் மாதம் பிரமிளாவின் கணவர் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளியில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். அப்போது தனது ஊருக்கு பக்கத்து ஊர் ரோட் பாண்டா தாண்டாவை சேர்ந்த திருப்பதி (25) என்பவரை சந்தித்தார்.Arrest - Depriving Crime or Depriving Right? | KnowLaw

பிரமிளாவிற்கு திருப்பதியை சிறு வயது முதலே தெரியும் என்பதால் நட்பாக பழகி வந்தனர். பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இந்த நிலையில் திருப்பதியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்தனர். இந்த தகவல் பிரமிளாவிற்கு தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரமிளா திருப்பதிக்கு போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். பிரமிளா உயிரோடு இருந்தால் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாது. எனவே பிரமிளாவை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி பிரமிளாவிற்கு போன் செய்து பச்சுப்பள்ளி மெயின் ரோட்டுக்கு நேரில் வந்தால் திருமணம் குறித்து பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து பிரமிளா பச்சுப்பள்ளி மெயின் ரோட்டில் திருப்பதியை சந்தித்தார். அப்போது திருமணம் செய்வது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திருப்பதி அந்த வழியாக வந்த டேங்கர் லாரி முன்பாக பிரமிளாவை பிடித்து தள்ளினார். இதில் டேங்கர் லாரி பிரமிளா மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பிரமிளா எதிர்பாராத விதமாக லாரியில் சிக்கி இறந்து விட்டதாக திருப்பதி போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருப்பதி பிரமிளாவை லாரியில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.

 

Related Post

வானில் பறந்த மர்ம பொருள்…பறக்கும் தட்டில் ஏலியன்களா..? வைரலாகும் வீடியோ!

Posted by - December 10, 2022 0
ஹைதராபாத் அருகே உள்ள கிராமம் ஒன்றில் வானில் மர்ம பறக்கும் பொருள் கடந்து சென்றதை வீடியோ எடுத்த பொதுமக்கள் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ…

மகாராஷ்டிராவில் சோகம் – 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி

Posted by - August 14, 2023 0
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே…

பான் கார்ட் விதிகளில் மாற்றம்.. ஏப்ரல் 1 முதல்

Posted by - March 19, 2026 0
பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.…

விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு தகவல்

Posted by - August 21, 2023 0
புதுடெல்லி: வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை கட்டப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

Posted by - October 30, 2023 0
கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *