கேரள குண்டுவெடிப்பு: போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசிய மார்டின்- வைரலாகும் பரபரப்பு வீடியோ

222 0

கேரளாவின் களமசேரியில் ஜெஹோவா’ஸ் விட்னெசஸ் சபையின் மத வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை 9 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

மேலும், 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, நான் தான் குண்டு வைத்தேன் என்று கூறி சம்பவத்திற்கு பொறுப்பேற்று கேரளாவை சேர்ந்த டோமினிக் மார்ட்டின் என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மார்ட்டினை ரகசிய காவலில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மார்ட்டின் போலீசில் சரணடைவதற்கு முன்பு பேஸ்புக் லைவில் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ” ஜெஹோவா’ஸ் விட்செனசஸ் சபையின் போதனைகள் மீது தனக்கு உடன்பாடு இல்லை. அச்சபையின் கருத்துகள் தேசத்திற்கே ஆபத்தானது.

தனது புகார்களை அச்சபை கண்டுகொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெஹோவா விட்னெசஸ் என்பது கிறிஸ்தவ மதத்தில் மிகச்சிறிய பிரிவு ஆகும். இந்த பிரிவை உலகம் முழுவதும் சுமார் 85 லட்சம் பேர் பின்பற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Posted by - December 11, 2024 0
Paracetamol: பாராசிட்டமால் மாத்திரைகள் தரமானதாக இல்லை என, மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிக்கடி பயன்படுத்தப்படும் பாராசிட்டமால் தொடர்பான அரசின் தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ”பாராசிட்டமால்…

உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 நகரங்கள் இந்தியாவில் உள்ளன: ஆய்வறிக்கையில் தகவல்

Posted by - March 14, 2023 0
புதுடெல்லி: உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு சாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து…

அதிகரிக்கும் கொரோனா.. இப்போதைக்கு பயப்பட வேண்டாம்.. எய்ம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர்..

Posted by - December 29, 2023 0
டெல்லியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இருவருக்கும் ஜே.என். 1 வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த…

யுபிஐ பண பரிவர்த்தனை புதிய விதிமுறை – இன்று முதல் அமல்!

Posted by - August 1, 2025 0
யுபிஐ பண பரிவர்த்தனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை தேசிய பண பரிவர்த்தனை கழகம் இன்று முதல் அமல்படுத்தி உள்ளது. அதன்படி GPay, PhonePe, Paytm உள்ளிட்ட யுபிஐ…

பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது: ஆய்வில் தகவல்

Posted by - June 10, 2023 0
பெங்களூரு : பெங்களூருவில், பிலிப்பைன்ஸ் நாட்டில் சுரங்க தொழில் செய்து வரும் பிரபல தொழில் அதிபரான சையத் சமீர் உசேன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *