நன்றி செலுத்தி நன்மை செய்யும் பெருநாள்!

132 0

இறைவனுக்கு நன்றி செலுத்தும் மிக முக்கியப் பெருநாள் ஈதுல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) ஆகும். புனித ரமளான் மாதத்தை நோன்பு, குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்தல் உள்ளிட்ட வணக்கவழிபாடுகளுடன் பூர்த்தி செய்தபின் இறைவன் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஷவ்வால் மாத முதல் நாளில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் தினத்தின் பெயரே ‘ஈதுல் ஃபித்ர்’ என்று சொல்லப்படும்.

‘ஈத்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘பெருநாள்’ என்றும், ‘ஃபித்ர்’ என்ற அரபிச் சொல்லுக்கு ‘நோன்பு துறத்தல்’ என்றும் பொருள். ஒரு மாதம் இறைவனுக்காக நோன்பிருந்து அந்த நோன்புக் காலம் முடிவடைந்ததை மகிழ்வுடன் கொண்டாடும் தினமே இது. இதுகுறித்து இறைவன் அருள்மறையில், ‘நீங்கள் ரமளானில் நோன்பிருக்கும் காலத்தை பூரணப்படுத்தி, உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியமைக்காக அவனைபெருமைப்படுத்த வேண்டும்… அப்படி செய்தால் நீங்கள் நன்றி செலுத்தியோராவீர்கள்’ (அல்குர்ஆன் 2: 185) என்று குறிப்பிடுகிறான்.

இதன் அடிப்படையில் ரமளான் மாதம் முடிந்ததைக் குறிக்கும் ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டவுடன் இறைவனைத் துதிக்கும் வண்ணம் ‘அல்லாஹு அக்பர்! அல்லாஹுஅக்பர்! லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்.. அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து’ (அல்லாஹ் பெரியவன்! அல்லாஹ் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிரவேறு யாருமில்லை. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) எனும் தக்பீர் முழக்கத்தை இஸ்லாமியர்கள் பெருநாளன்று காலை, சிறப்புத் தொழுகை முடியும் வரை முழக்கமிட்டுக் கொண்டேயிருப்பர்.

இதுபோன்று ஈதுல் அள்ஹா எனும் ஹஜ் பெருநாள் குறித்து, ‘அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 22: 37) என்று கூறுகிறான்.

‘நீங்கள் மனித சமூகத்துக்காக அனுப்பப்பட்ட சிறந்த சமூகமாக உள்ளீர்கள். ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வை நம்பி ஏற்று, நன்மையை ஏவுகின்றீர்கள், தீமையைத் தடுக்கின்றீர்கள்…” (அல்குர்ஆன் 3:110) என்று இறைவன் கூறுகிறான். இவ்வசனத்தில் நன்மைகள் என்பது மனித குலத்துக்கும், முழு உலகுக்கும் நன்மையாக அமைகின்ற அனைத்தையும் குறிக்கும். மனிதர்களுக்கும், இவ்வுலகுக்கும் தீங்காக அமைகின்ற அனைத்தும் தீமையாகும். ஒரு முஸ்லிம் இவ்வாறு நன்மைகளைஏவி, தீமைகளைத் தடுத்து தம் வாழ்வை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதையே இஸ்லாம் போதிக்கிறது.

அந்த வகையில் பார்க்கும்போது இஸ்லாத்தின் இரு பெரும் கடமைகளுடன் தொடர்பாகவே இந்த இரு பெருநாட்களும் அமையப் பெற்றுள்ளமையைக் காண்கிறோம். ஒன்று நோன்பு; மற்றது ஹஜ். இவை இரண்டின் உள்ளடக்கத்தையும் பார்க்கின்றபோது அவை இவ்வுலகில் நிகழ்ந்த இரு பெரும் நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்று அகிலத்தார்க்கு வழிகாட்டியாக அருளப்பட்ட அல்குர்ஆன் அருளப்பட்ட நிகழ்வு, மற்றொன்று இறைத்தூதர்களின் முன்னோடி இப்றாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுபடுத்தும் நிகழ்வுகள்.

இந்தத் தொடர்புகள் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை சொல்கின்றன. அது என்னவெனில், ஒரு முஸ்லிம் எத்தகைய சூழ்நிலையிலும் அவனது அடிப்படை பணியை விட்டு விலகி வாழக் கூடாது, அது அவனது கொண்டாட்டங்களாயினும் சரியே. உண்மையில் நேர்வழி கிடைத்தல், அதற்காக உழைத்தல் என்பது இந்த உலக நலனுக்காகவும் இந்த உலகில் வாழும் அனைவரதும், அனைத்தினதும் நலனுக்காகவும் உழைத்தல் என்றுதான் இஸ்லாம் கருதுகின்றது. அந்த வகையில் இவ்விரு பெருநாட்களும் முஸ்லிம் சமூகத்துடன் மாத்திரம் சுருங்கிய கொண்டாட்டங்களாக அல்லாமல், இந்த உலகம் வளம் பெறுவதற்கான உழைப்பை நினைவுகூறும் தினங்களாகப் பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.

பெருநாள் அருள்மறை இறங்கியதை கொண்டாடும் தினம் என்பதால், அது இறங்கிய நோக்கங்களுள் பிரதானமானதான மனித நலன் காத்தல் என்ற பணியால் இந் நாட்களை நாம் அழகுபடுத்த வேண்டும். அப்போதுதான் இந்நாட்கள் குறிப்பாக நம்மைச் சூழ வாழும் சகோதர சமூகத்தினருக்கும் விருப்பத்துக்குரிய நாட்களாக, அவர்களாலும் பெரிதும் விரும்பப்படுகின்ற, கொண்டாடப்படுகின்ற நாட்களாக மாறும். இறைவன் நம் அனைவரின் மீதும் அருள்புரிவானாக!தலைமை இமாம், ஜும்ஆ மஸ்ஜித், மயிலாப்பூர், சென்னை

Related Post

செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…

Posted by - August 15, 2024 0
Independence Day | நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. நாட்டின்…

ரயில் விபத்து.. தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

Posted by - June 3, 2023 0
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தையொட்டி தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

குழந்தைகள் ஜாக்கிரதை – வேகமாக பரவும் பொன்னுக்கு வீங்கி – நோய்க்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சை, தடுப்பது எப்படி?

Posted by - February 8, 2025 0
தமிழ்நாட்டில் மம்ப்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம், தடுப்பது எப்படி மற்றும் சிகிச்சை…

ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை: சென்னையிலும் விலை உயர வாய்ப்பு

Posted by - July 29, 2023 0
திருப்பதி: ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி…

கேரளாவில் 5 ஆண்டுகளில் மாயமான 62 குழந்தைகள் எங்கே?

Posted by - November 29, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஓயூரை சேர்ந்தவர் ரெஜி. இவரது மகள் அபிகேல் சாரா ரெஜினா (வயது 6). இவர் தனது 8 வயது அண்ணன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *