ஆந்திராவில் தக்காளி கிலோ ரூ.200-க்கு விற்பனை: சென்னையிலும் விலை உயர வாய்ப்பு

361 0

திருப்பதி:

ஆந்திராவில் அதிகளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து முதல் ரக தக்காளிகள் வடமாநிலங்கள் மற்றும் சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆந்திராவில் கனமழை காரணமாக தற்போது விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று முதல் தக்காளி கிலோ 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை இல்லாத வகையில் தக்காளி விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே அங்கல்லு தக்காளி மொத்த விற்பனை சந்தை உள்ளது.ஒரு கிலோ 200 ரூபாயை எட்டவுள்ள தக்காளி விலை - தக்காளியா? தங்கமா?  இல்லத்தரசிகள் அதிர்ச்சி! - தமிழ்நாடு

சித்தூர், மதனப்பள்ளி, கலகடா, குர்ரம் கொண்டா, வால்மீகிபுரம், முலகலா செருவு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் இங்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக 280 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்தது. இதனால் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வடமாநிலங்கள் மற்றும் சென்னைக்கு தக்காளி ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவை போல சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் என தக்காளி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Related Post

640 கிலோ மீட்டர்ல இருக்கு..! எப்போ மழை? எவ்வளவு வேகத்தில் காற்று வீசப்போகிறது?

Posted by - December 8, 2022 0
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாண்டஸ்…

அழகாக இருந்தால் தள்ளுபடியாம்.. வரதட்சணை காரணமாக நிராகரித்த ஆண்கள்: போராட்டத்தை தொடங்கிய ஆசிரியை

Posted by - July 4, 2023 0
திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இந்தியாவில் சட்டவிரோதம். ஆனால் பெரும்பாலான திருமணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை என்பது நடைமுறையில் உள்ளது. வரதட்சணையால் பெண்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்த…

கணவர், மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டிய பெண்- 7 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது

Posted by - February 20, 2023 0
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று…

மாநில அந்தஸ்து கோரி போராட்டம்: லடாக் கலவர பாதிப்பும் பின்னணியும்

Posted by - September 25, 2025 0
லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக்…

அட்ரஸ் கேட்டதால் தலைக்கேறிய கோபம்: டெலிவரி நிர்வாகியை கத்தியால் தாக்கிய பெண்

Posted by - August 24, 2023 0
பார்சல் டெலிவரி செய்யும் நபர்கள், சில நேரங்களில் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டெல்லியில் பெண் ஒருவர், டெலிவரி நிர்வாகியை கத்தியால்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *