பக்கா ஸ்கெட்ச்.. வணிக வளாகத்தில் வன்முறை, கோடிக்கணக்கில் கொள்ளை.. 50 பேர் கும்பல் வெறிச்செயல்

316 0

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா (Canoga Park). இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping mall).

இந்த வணிக வளாகத்தில் உள்ள நார்ட்ஸ்ட்ராம் பல்பொருள் அங்காடியில் (Nordstrom Department Store), 2 நாட்களுக்கு முன் மாலை 4 மணியளவில் திடீரென சுமார் 50 பேர் கொண்ட ஒரு கும்பல் உள்ளே நுழைந்தது. Baka sketch.. Violence in shopping complex, robbery of crores.. 50 gang  rampageஅந்த கும்பல் தங்கள் அடையாளங்களை மறைக்க பலவிதமான முகமூடிகளை அணிந்து வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாசலில் இருந்த காவலர்கள் முகங்கள் மீது கரடியை விரட்ட பயன்படுத்தும் ஸ்பிரேயை அடித்தனர். இதனால் அந்த காவலர்கள் செயலிழந்து நின்றனர். அதன் பிறகு அந்த கும்பல் அங்கு ஒரு வன்முறை வெறியாட்டத்தையே நிகழ்த்தியது.

அந்த வன்முறை கும்பல் கடையில் உள்ள கைக்கு கிடைத்த விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் பைகளில் போட்டு கொண்டன. கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பல விலையுயர்ந்த பொருட்களையும், துணிக்கடை பொம்மைகளையும் நாசம் செய்தது. இவர்களின் வெறியாட்டத்தை கண்ட கடை ஊழியர்கள் செய்வதறியாது பயந்து நின்றனர்.

அந்த கொள்ளையர்கள் அங்குள்ள விலையுயர்ந்த பொருட்களையும், ஆடைகளையும் கொள்ளையடித்த பிறகு காவல்துறை வருவதற்குள் வேகவேகமாக வெளியேறி, பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் லெக்ஸஸ் (Lexus) கார்களில் தப்பித்து சென்றனர். “காட்டுமிராண்டித்தனமான ஒரு வன்முறையிலும், கொள்ளையிலும் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக அங்கிருந்தவர்களோடு நேரில் பேசி வருகிறோம். இது வெறும் கொள்ளை சம்பவம் மட்டுமல்ல.

இப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விஷயம். இக்குற்றத்தில் சம்பந்தபட்டவர்களை விரைவில் பிடிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும்” என இச்சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை ஆணையர் ஜிஸெல் எஸ்பினோஸா கூறியிருக்கிறார். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.2.5 கோடிக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது.

Related Post

கனடா காட்டுத்தீயால் 8 கோடி அமெரிக்கர்கள் அசுத்த காற்றை சுவாசிக்கும் அபாயம்

Posted by - June 30, 2023 0
வாஷிங்டன் : கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் கடந்த மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதன்…

15 ஆண்டுகளுக்கு பின் ரேஸிங் களத்தில் அஜித்… போர்ஷே காரில் கெத்தாக வந்த டீம்!

Posted by - November 28, 2024 0
 இந்த நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோவை தனது நிறுவனத்தின் காரிலும் அஜித் பயன்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஜிடி 4 கார் பந்தயத்துக்கு தயாராகும் தனது நிறுவன…

உக்ரைன் அணை உடைந்து பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

Posted by - June 27, 2023 0
கீவ் : உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது நோவா ககோவ்கா அணைக்கட்டு உள்ளது. 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 30 மீட்டர்…

ஹனிமூனுக்கு ஏன் ’ஹனிமூன்’ என பெயர் வந்தது தெரியுமா..?

Posted by - November 23, 2024 0
ஆக்ஸ் ஃபோர்ட் டிக்‌ஷரி ஹனிமூன் என்ற வார்த்தைக்கு திருமணமான முதல் மாதத்தை ஹனிமூன் என்று வரையறுக்கிறது. ஏனெனில் அந்த முதல் மாதம்தான் சண்டைகள் ஏதுமின்றி பரஸ்பர புரிதல்களோடு,…

அமெரிக்காவிற்கு எதிராக திரும்பிய இந்திய கூட்டாளிகள் – ”ஈரானை அடிச்சது தப்பு” பாக்.,ற்கு கொட்டு

Posted by - July 7, 2025 0
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் அமெரிக்காவின் சரிநிகர் வரி விதிப்பு முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. BRICS Summit: பிரிக்ஸ் அமைப்பு நாடுகள் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஈரான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *