பழைய டிவிய மாத்த வேண்டியதுதானு, உங்களையே சொல்ல வைக்கும்படியான பட்ஜெட்டில் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி (43 inch Infinix QLED TV) ஆர்டருக்கு வந்துள்ளது. ரூ.20,000 பட்ஜெட்டைகூட தொடாமல், அதைவிட மலிவான விலைக்கு கியூஎல்இடி டிஸ்பிளே, 40W டால்பி ஆடியோ, 4K ரெசொலூஷன், கூகுள் டிவி ஓஎஸ் போன்ற ஒட்டுமொத்த பக்கா பீச்சர்களையும் பேக் செய்து கொடுத்துள்ளது. இப்போது, பிளிப்கார்ட் டிஸ்கவுண்ட்டில் (Flipkart Discount) கிடைக்காத விலைக்கு வந்துள்ளது. இந்த டிவியின் விவரங்கள் இதோ.32 இன்ச் டிவி வைத்திருக்கும் கஸ்டமர்கள் 43 இன்ச் டிவி வாங்க திட்டமிட்டிருந்தும், ஆஃபரில் வாங்கி கொள்ளலாம் என்று காத்திருப்பார்கள். இந்த கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் மிஸ் செய்யக்கூடாத நேரம் வந்துவிட்டது. 2024ஆம் ஆண்டு முடிவதால், இயர்-எண்ட் விற்பனையில் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவிக்கு சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறது.43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (43 inch Infinix QLED TV Specification): இந்த டிவி 43GU1Q மாடலாகும். அல்ட்ரா எச்டி (Ultra HD) டெக்னாலஜி கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4K ரெசொலூஷன் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 300 நிட்ஸ் பிரைட்னஸ் பெற்று கொள்ளலாம். மேலும், எச்டிஆர்10 (HDR10) மற்றும் 1.07 பில்லியன் கலர் என்ஹான்ஸ் கிடைக்கிறது. ஆகவே, 4K ரெசொலூஷன் மட்டுமல்லாமல், கலர் அக்கியூரசியிலும் குவாலிட்டியான வீடியோ அனுபவம் கிடைக்கும். ஃபுல்எச்டி என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க எபிக் என்ஜின் (Epic Engine) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, பட்ஜெட்டில் டிஸ்பிளேவில் குறையில்லை.
இந்த கியூஎல்இடி டிவியில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி சப்போர்ட் கிடைக்கிறது. குவாட்-கோர் சிப்செட்டுடன் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) பேக் செய்துள்ளது. கூகுள் ஓஎஸ் வருவதால், கூகுள் ஹோம் (Google Home), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) கிடைக்கிறது.ஆகவே, ரிமோட்டிலும் கூகுள் வாய்ஸ் எனபில்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும், நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்ற ஓடிடி ஆப்களுக்காக கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. இந்த டிவியின் ஆடியோவில் பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட்டுடன் 40W அவுட்புட் பெறலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஆடியோ கூடுதலாகவே அவுட்புட் கொடுக்கும்படி இருக்கிறது. இந்த 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவியின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், 3 எச்டிஎம்ஐ (HDMI) போர்ட்களும், 2 யுஎஸ்பி (USB) போர்ட்களும் கிடைக்கின்றன. மேலும், எல்ஏஎன் (LAN), ஆர்எப் (RF) கிடைக்கிறது. இதுபோக வழக்கமாக கிடைக்கும் டிஜிட்டல் ஆடியோ (Digital Audio), ஏவி இன் (AV IN) கனெக்டிவிட்டிகளும் வருகிறது. மேலும், இன்-பில்ட் வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. ஈதர்நெட் (Ethernet) சப்போர்ட் வருகிறது. இப்போது, விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.பிளிப்கார்ட் இயர்-எண்ட் விற்பனையில் 43 இன்ச் இன்பினிக்ஸ் கியூஎல்இடி டிவிக்கு 38 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.18,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஒரு வருட வாரண்டி மற்றும் இலவச டெலிவரி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு கியூஎல்இடி டிஸ்பிளே மற்றும் டால்பி ஆடியோ வரவேற்க கூடியது.
Related Post
மாணவியை காதலிப்பதில் தகராறு: தேர்வு அறையில் 9-ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய சக மாணவன்
திருப்பதி: ஆந்திர மாநிலம், ராஜமகேந்திராவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி சாய் பிரசாத்(வயது14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே வகுப்பில் உதயசங்கர்…
இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இ.ண்.டி.யா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற CM ஸ்டாலின்…
இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இண்டியா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதலமைச்சர்.. பிரதமருடனான சந்திப்பில் நேரம் மாற்றம்! வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…
அதள பாதாளத்தில் பங்குச் சந்தை.. மாஸ் காட்டிய ஐடி பங்குகள்!
மிகவும் மோசமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் இன்று பங்குச் சந்தை பெரிய சரிவை செய்துள்ளது. நாளின் முடிவில் சென்செக்ஸ்-நிஃப்டி ஒவ்வொன்றும் 1%க்கும் அதிகமாக சரிந்தன. ஐடி மற்றும்…
2025ல் கேபிள் டிவிக்கு குட்பை! ரூ.175 க்கு 16 OTT, 350 TV சேனல்களை இறக்கிய Vodafone! ரூ.154 க்கும் கிடைக்கும்!
ஏற்கனவே ஓடிடி (OTT) தளங்களின் எண்ணிக்கையும், அவைகளின் சந்தாதார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. போகிற போக்கை பார்த்தால் கேபிள் டிவி (Cable TV) என்கிற…
நாடு முழுவதும் நடந்த 2 மாத கால ஆய்வில் ரூ.15 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு
புதுடெல்லி: வர்த்தக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி. சட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வது கட்டாயம். அப்படி பதிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. அடையாள எண் அளிக்கப்படும். ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (469)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (283)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

- சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

- TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

- கும்பகோணம் த.வெ.க வேட்பாளர் புது முயற்சி….
