“பா.ஜ.கவுக்கும் எனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” – பிரதமர் மோடி

210 0

பிரதமர் மோடி

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. நேற்று பா.ம.க சேர்ந்துள்ளதால். ராமதாஸின் அனுபவ அறிவும் , அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும்” எனவும் தெரிவித்தார்.

“பா.ஜ.க வுக்கும் , தனக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி கோவையில் வாகனப் பேரணி சென்றார். தொடர்ந்து இரவு கோவையில் தங்கிய அவர், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு புறப்பட்டுச் சென்றார். பாலக்காட்டில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நண்பகல் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பிற்பகல் 12.50 மணியளவில் சேலம் வந்தடைந்தார். சேலம் – நாமக்கல் புறவழிச்சாலையில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டியில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பாரத அன்னை வாழ்க .. என் தமிழ் சகோதார , சகோதரிகளே வணக்கம்.. கோட்டை மாரியம்மன் கோவில் இடத்திற்கு வந்துள்ளேன் என தமிழில் தனது உரையை தொடங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இதற்கு முன்பு பல முறை வந்துள்ளேன். தமிழகத்தில் பா.ஜ.க வுக்கும் மோடிக்கும் கிடைத்த வரவேற்பு நாடே பார்த்தது. நான் நேற்று மக்கள் வெள்ளத்தில் நீந்தினேன். பா.ஜ.க வுக்கும் , மோடிக்கு கிடைத்த ஆதரவை பார்த்து திமுகவிற்கு தூக்கமே தொலைந்து விட்டது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “தமிழ்நாடு மக்கள் முடிவு செய்து விட்டார்கள். தமிழகம் வளர்ச்சியடைய பாஜக 400 ஜ தாண்ட வேண்டும். பாரதம் தன்னிறைவு பெற , மீனவர் பாதுகாப்பிற்கு , விவசாயிகள் வளம் பெற 400 க்கு மேல வெற்றி பெற வேண்டும்” என்று பேசினார்.

“தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. நேற்று பா.ம.க சேர்ந்துள்ளதால். ராமதாஸின் அனுபவ அறிவும் , அன்புமணியின் திறமையும் தமிழகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும்” எனவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, குஷ்பு மற்றும் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related Post

ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்

Posted by - December 24, 2025 0
அதிமுக- பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் என எதிர்பார்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அ.தி.மு.க.வில் இணையமாட்டோம் என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…

“சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்” – உதயநிதிக்கு செந்தில் பாலாஜி வாழ்த்து!

Posted by - December 13, 2022 0
நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின். அமைச்சராக பதவியேற்க போகும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு மின்சாரத்துறை…

“பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள்”..ஆனால் இப்போ பாருங்க.!…இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!

Posted by - March 8, 2025 0
அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என கூறியிருந்த நிலையில், இன்று அதிமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார், அண்ணாமலை பாஜகவால் தோற்றோம் , பாஜக நோட்டா கட்சி என…

5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை – முன்னாள் அமைச்சர் தங்கமணி

Posted by - April 1, 2026 0
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தது மட்டுமே திமுகவின் சாதனை என, முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். குமாரபாளையம் தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான…

ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?

Posted by - January 7, 2026 0
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *