பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!

93 0

TVK Alliance : பாஜக, அஇஅதிமுக, சசிகலா, ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என தவெக தெரிவித்துள்ளது.

நெருங்கும் தேர்தல்- கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 35 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இறுதி கட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பலம் வாய்ந்த திமுக கூட்டணியை வீழ்த்தும் வகையில் அதிமுக சார்பாகவும் கூட்டணி உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்தாக நடிகர் விஜய்யின் தவெகவையும் தங்கள் அணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அதில் தவெகவிற்கு 50 தொகுதிகளும், துணை முதலமைச்சர் பதவியும் வழங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதன் காரணமாகவே அதிமுக இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தகவல் வெளியானது.

அதிமுகவுடன் கூட்டணியா.?

இந்த நிலையில் தவெக கூட்டணி தொடர்பாக வெளியாகி வரும் தகவலுக்கு முற்றுப்புள்ளு வைக்கும் வகையில்  தவெக இணை பொதுச்செயலாளர் CTR. நிர்மல் குமார் வெளியிட்டுள்ள பதிவில், வதந்திகளை நம்ப வேண்டாம்! சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

எந்தவித பேச்சுவார்த்தை நடத்தவில்லை

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல்  தலைவர்களுடன் எந்தவிதமான  பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு  தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! என CTR. நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Related Post

என்னைப் பற்றிய அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம்: தவெக நிர்வாகி ராஜ்மோகன்

Posted by - October 8, 2025 0
சென்னை: “என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறு, வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கரூர் துக்க சம்பவம் குறித்து தவெக துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கரூர்…

அதிமுகவில் இணைந்தது ஏன்?

Posted by - March 13, 2026 0
அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள்: ஆட்சி மாற்றம், மரண தண்டனை குறித்த பரபரப்பு பேச்சு! நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வந்த காளியம்மாள்…

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - March 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…

ஆண்டுதோறும் ரூ.2000 எக்ஸ்ட்ரா.! பேரவையில் சூப்பர் அறிவிப்பு

Posted by - February 20, 2026 0
சட்டப்பேரவையில் இன்று, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் கீதா ஜீவன். இனி ஆண்டுதோறும் கோடைகால சிறப்புத் தொகையாக மகளிருக்கு 2000 ரூபாய்…

பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன?

Posted by - March 13, 2026 0
திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். DMK Rajiv Gandhi: திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *