பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

230 0

பெங்களூரு :

பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் திருட்டுப்போய் இருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். மேலும் கோவில், அதை சுற்றி இருக்கும் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கேமராவில் சிக்கிய காட்சிகள் மூலமாக ஒரு நபரை வி.வி.புரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பரபரப்பு மற்றும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது.

அந்த நபர் பெயர் ரவி ஆகும். இவர், எய்ட்ஸ் (எச்.ஐ.வி) நோய்க்கு எதிராக மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தவர் ஆவார். அதாவது கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரை கர்நாடகம் உள்பட 33 மாநிலங்களில் எய்ட்ஸ் குறித்து மக்களிடம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார்.

6 ஆண்டுகளில் 33 மாநிலங்களுக்கு சைக்கிளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்ததால், ரவியின் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ரவிக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மோட்டார் சைக்கிளை பரிசாகவும் வழங்கி கவுரவப்படுத்தி இருந்தது.

கின்னஸ் சாதனையாளரான ரவி, சமீபகாலமாக வேலை எதுவும் இல்லாமல் வறுமையில் வாடி வந்தார். அந்த வறுமை தான் அவரை திருடனாகவும் மாற்றி இருக்கிறது. இதனால் அவர், வி.வி.புரத்தில் உள்ள வாசவி அம்மன் கோவிலுக்கு சென்று வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்களை திருடியது தெரியவந்தது. அந்த சாமி சிலையை போலீசார் மீட்டுள்ளனர். கைதான ரவி மீது வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

திருமணம் செய்ய வற்புறுத்தியதால் லாரியில் தள்ளி இளம்பெண் கொலை- காதலன் கைது

Posted by - August 7, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், மச்சரெட்டி மண்டலம், நெமலி குட்டா தாண்டாவை சேர்ந்தவர் பிரமிளா (வயது 23). இன்டர்மீடியா படித்து வந்த பிரமிளா படிப்பை பாதியில்…

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயம்..

Posted by - March 15, 2024 0
மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக அக்கட்சி X தளத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. அதில் அவர்…

காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்: கார்கே கண்டனம்..!!

Posted by - February 16, 2024 0
காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் போராடுவார்கள் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். சர்வாதிகாரத்தின்…

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?

Posted by - March 12, 2024 0
 தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம்…

ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா?: புதிய பரபரப்பு

Posted by - June 10, 2023 0
புவனேசுவரம் : ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *