இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?

343 0

 தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பிறை தென்பட்டது. இதனால் நேற்று (திங்கட்கிழமை) முதல் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு தொடங்கியது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாகவும் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவர்களை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டியவைகள்..

1. புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் அனைத்து வகையான அசுத்தங்கள் மற்றும் இன்பங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாறாக, அவர்கள் பிரார்த்தனைகள், ஆன்மாவின் தூய்மை, ஆன்மீகம் மற்றும் தொண்டு ஆகியவற்றில் தங்கள் மனதை செலுத்த வேண்டும். இதை காலம் காலமாக இஸ்லாமிய மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

2. புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பது இந்த மாதத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே, விரத விதிப்படி சூரியன் உதிக்கும் முன்பும், சூரியன் மறைந்த பின்பும் மட்டுமே உணவு உண்ணலாம்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்பட்டவர்கள் இந்த நேரத்தில் நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். பருவமடையும் குழந்தைகள் நோன்பு வைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே போன்று, மிகவும் வயதான பெரியோர்களும் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.4. பாரம்பரியமாக, மக்கள் பேரீச்சம்பழத்துடன் நோன்பை முடித்து கொள்வார்கள்.5. ஒரு மாத நோன்பை முடிக்கும் வகையில் மிகப்பெரிய இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தின் பண்டிகை நாளில், சந்திரனைப் பார்த்த பிறகு நோம்பு முடிவடைகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ரம்ஜான் கொண்டாட்டத்தில் உணவு தானம் செய்ய வேண்டும். அதாவது சமைத்த உணவை சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண வேண்டும்.

Related Post

இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

Posted by - January 6, 2025 0
சீனாவில் HMPV வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது இந்தியாவில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சீனாவில் புதியதாக HMPV என்ற…

10 ரூபாய்க்கு ஸ்போர்ட்ஸ் ட்ரிங்ஸ்…

Posted by - June 19, 2025 0
ஒரு காலத்தில் பெப்சி கோக் போன்ற கார்பரேட் ட்ரிங்ஸ்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்பாக கோலி சோடா, மோர், ரஸ்னா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே தேசத்தில் இருந்து வந்தன,…
annamalai bjp

எம்பி ஆகிறார் அண்ணாமலை? ஆந்திராவில் இருந்து அடித்துள்ள ஜாக்பாட்!

Posted by - April 26, 2026 0
ஆந்திராவில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகளில் ஒரு பதவியை அண்ணாமலைக்கு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தலைவர்…

திரும்பும் திசையெல்லாம் அழுகுரல் – வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நிதியுதவி..!!

Posted by - August 2, 2024 0
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல…

பஞ்சாபில் பட்டப்பகலில் வங்கியில் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.22½ லட்சம் கொள்ளை

Posted by - February 17, 2023 0
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ரானி கா பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகரின் முக்கிய பகுதியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *