பெண்களை மட்டும் அசிங்கப்படுத்தும் விஜய் சேதுபதி! கமல்ஹாசனே இருந்திருக்கலாம்.. தாக்கிய ஜேம்ஸ் வசந்தன்!

225 0

நடிகர் விஜய் சேதுபதி தற்போது பிக் பாஸ் 8ம் சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 7 வருடங்களாக ஷாவின் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

தற்போது விஜய் சேதுபதி பேசும் விதத்தை பார்த்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். இதற்கு கமல் ஹாசன் இருந்திருக்கலாம் என பலரும் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பிக் பாஸ் விஜய் சேதுபதியை தாக்கி பேசி இருக்கிறார்.

கமலிடம் பண்பு இருந்தது

Bigg Boss – இந்நிகழ்ச்சியின் முன்னாள் நடத்துநர் கமல்ஹாசன்; இப்போது விஜய் சேதுபதி. இருவரும் அவரவர் பாணியில் நடத்துவதும், அதற்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுவதும் இயல்புதானே. கமல்ஹாசன் மேலிருந்தக் குற்றச்சாட்டு “எல்லாரிடமும் ரொம்பவும் மென்மையாக, கொஞ்சம்கூடக் கடிந்துகொள்ளாமல், கண்டிப்பு இல்லாமல் இருக்கிறார்” என்பதுதான்.

இதையெல்லாம் கேட்டறிந்துதானே வந்திருப்பார் VJS. தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் இயல்பான, அதிரடியான பாணியைக் கண்டு வியந்தவரும், பாராட்டியவரும் இன்று வெறுப்படையும் நிலைக்குச் சென்றிருக்கின்றனர். போட்டியாளர்களிடம் உரையாடும்போதும், பிரச்சனைகளை ஆராய்ந்தபோதும் கமல்ஹாசனிடம் பண்பு இருந்தது, முதிர்ச்சி இருந்தது, ஞானம் இருந்தது, மதிநுட்பம் இருந்தது, சமூகப் பொறுப்பு இருந்ததுஒவ்வொருவரையும் ஆளுமைகளாகவே பார்த்தார்; கையாண்டார். அவர்களை நேரடியாகக் குற்றப்படுத்தியதில்லை, சொற்களால் காயப்படுத்தியதில்லை, மட்டுப்படுத்தியதில்லை, தனிப்பட்ட விதத்தில் தாக்கியதில்லை, அவர்கள் உணர்வுகளைச் சீண்டியதில்லை, தனக்கிருந்த உயர்பொறுப்பைக் கொண்டு அவர்களைச் சிறுமைப்படுத்தியதில்லை. இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேனென்று புரிந்துகொள்பவர் புரிந்துகொள்ளட்டும்.

“அத்தனைக் குற்றங்கள் செய்த ஆண்களை விசாரிக்காமல், ஏற்கனவே அவர்களால் உணர்வுபங்கம் செய்யப்பட்டப் பெண்ணை இவரும் சேர்ந்து குற்றப்படுத்தி, சிறுமைப்படுத்தி, தான் செய்ததுதான் தவறு என்று சொல்லவைத்து நொறுங்கவைத்து மகிழ்ந்ததையும் நேற்று கண்டபோது, தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் எதிர்காலத்தைக் குறித்த அச்சம் மேலோங்கியது.”

“அதோடு நிற்கவில்லை. வெறிபிடித்த விலங்குகள் போல சுற்றிநின்று அந்தப் பெண்ணை உணர்வளவில் சின்னாபின்னமாக்கிய அந்த ஆண்களைப் பாராட்டி, Bigg Boss வரலாற்றிலேயே சிறந்த பங்கேற்பாளர் என்கிற பட்டத்தையும் வழங்கியது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.”

இது ஒரு தொகுப்பாளர்க்கு அழகா?

“போட்டியாளர்களும் உங்களையும் என்னையும் போல மனிதர்தானே? அவரவர்க்கு ஒரு பேசும், சிந்திக்கும், செயல்படும் விதம் இருப்பதும் இயற்கைதானே? அதை கிண்டலடிப்பதும், கடுமையாக சாடுவதும், இவர் நினைப்பதையே அவர்கள் சொல்லவேண்டும், அதை இவர் விரும்பும் வண்ணமே சொல்லவேண்டும் என்பதும், சொல்லாவிட்டால் சினமடைவதும், சலித்துக்கொள்வதும், எதிரில் நிற்பவரைப் பொதுவெளியில் கேவலப்படுத்துவதும், வேண்டா வெறுப்போடு அவர்களிடம் உரையாடுவதும் ஒரு தொகுப்பாளர்க்கு அழகா? ”

பணத்துக்காக நிகழ்ச்சி நடத்த வருபவர் குறைந்தபட்ச பொறுப்போடு, கண்ணியத்தோடு, ஈடுபாட்டோடு நடத்தவேண்டும்.

Related Post

பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக 3 சீரியல்களை முடிக்க பிளான் போட்ட விஜய் டிவி- இந்த தொடர்களா?

Posted by - August 30, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியில் எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் 2வது வாரத்தில்…

தேதி வாரியாக மெசேஜ்களை ஆண்ட்ராய்டு பயனர்கள் தேடும் அம்சம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

Posted by - March 2, 2024 0
சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப்…

ஆர்வம் காட்டும் விஜய்.. முதல் ஆளாக கை கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Posted by - April 3, 2023 0
கோலிவுட்டின் மாஸ் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது விஜய் வாரிசு தொடர்ந்து…

பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளருமான ஓவியாவும் பிக் பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் பங்கேற்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது.

Posted by - September 14, 2023 0
பிக் பாஸ் சீசன் 7 விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் கலந்து  கொள்ளும் போட்டியாளர்கள் தான் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் டாக் ஆஃப் தி டவுன்.…

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பல லட்சம் தொகையுடன் பணப்பெட்டி வந்துருச்சு.. எடுத்துக்கொண்ட வெளியேற போகும் நபர் இவரா

Posted by - January 2, 2024 0
பிக் பாஸில் இந்த வாரம் கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *