பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி – காதலன் உயிரிழப்பு..!!

266 0

மயிலாடுதுறையில் காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறையில் இளம் வயதுடையவர்களான ஆகாஷ் மற்றும் சிந்துஜா இருவரும் காதலித்து வந்துள்ளனர் . இந்நிலையில் காதலன் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விஷயம் காதலி சிந்துஜாவுக்கு தெரியவர இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. நிலையில் சம்பவத்தன்று தன் வீட்டுக்கு தேவை என ஆகாஷை சிந்துஜா பெட்ரோல் வாங்கி வரக் கூறியுள்ளார்.

பின்னர் பைக்கில் ஒன்றாக வரும்போது மீண்டும் அந்த பிரச்சனை குறித்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த சிந்துஜா உடனே தன்னிடம் இருந்த பெட்ரோலை தன் மீதும் ஆகாஷ் மீதும் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார்.

இதில் இருவரும் பல காயமடைந்த நிலையில் இவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post

அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்!

Posted by - May 25, 2023 0
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 5…

இரணியல் அருகே 3 ஆண்டுகளாக 3 மகன்களை வீட்டில் அடைத்து வைத்த பெற்றோர்

Posted by - March 31, 2023 0
திங்கள்சந்தை : இரணியல் அருகே உள்ள ஆத்திவிளை ஊராட்சி வார்டு உறுப்பினர் பெல்சி நேற்று காலையில் ஊராட்சி அலுவலக ஊழியருடன் கானாங்குளத்தங்கரை பகுதியில் வரி வசூல் செய்ய…

“மியூட் மோடில் திமுக அரசு” தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்

Posted by - June 5, 2025 0
“80 வயது மூதாட்டிக்கு பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான நிலை? ஒரு முதல்வராக இந்த செய்தியெல்லாம் ஸ்டாலினை ஏன் உறுத்தவில்லை?” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.…

அதிகாலை வந்த பரபர அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை!

Posted by - December 25, 2023 0
சென்னை: கிறிஸ்துமஸ் நாளான இன்று அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை…

கல்வி விருது விழா – விஜய்யுடன் மாஸ்டர் போஸ் கொடுத்த மாணவர் – வைரலாகும் போட்டோ

Posted by - June 17, 2023 0
விஜய்யுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும்போது மாஸ்டர் ஸ்டைலில் போஸ் கொடுத்த மாணவரின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *