அதிகாலை வந்த பரபர அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை!

243 0

சென்னை:

கிறிஸ்துமஸ் நாளான இன்று அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யவில்லை என்றாலும், வடகிழக்கு பருவமழை நல்ல மழையைக் கொடுத்தது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், நீர் நிலைகள் நிரம்பின.

குறிப்பாக டிசம்பர் மாதம் கொட்டிய கனமழை பல்வேறு தரப்பினரையும் கடுமையாகப் பாதித்தது. மிக்ஜாம் புயல் காரணமாக இம்மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.அதிகாலை வந்த பரபர அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்ளிட்ட 7  மாவட்டங்களில் கொட்ட போகுது மழை! | Which 7 districts will receive rain for  next 3 hours according to Chennai ...

கனமழை:

தலைநகர் சென்னையில் நகர் முழுவதும் மழை நீர் தேங்கிய நிலையில், அது வடியவே சில நாட்கள் வரை ஆனது. பிரதான சாலைகளில் நீர் உடனடியாக வடிந்தாலும், உட்புற சாலைகளில் மோட்டர் வைத்து நீரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாதிப்புகள் மிக மோசமாக இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் தென்தமிழகத்தில் பல மணி நேரம் கேப் விடாமல் பெய்த மழை தென்தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டியது.

குறுகிய காலத்தில் அதிகப்படியான மழை கொட்டிய நிலையில், அங்கும் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தன. இப்படி ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் இரு பகுதிகளில் கனமழை

அடுத்த 3 மணி நேரம்:

இதற்கிடையே கிறிஸ்துமஸ் தினமான இன்று காலையில் 3 மணி நேரத்திற்கு ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் சில பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை இருக்கும் என்பதால் கிறிஸ்துமஸ் நாளான இன்று வெளியே செல்ல திட்டமிடுபவர்கள் அதற்கேற்ப திட்டமிடவும்.

வானிலை மையம்:

முன்னதாக வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நேற்று முன்தினம் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதனால் இன்று டிச.25ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை டிச. 26ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல டிச. 29 மற்றும் டிச. 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்” என்று வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

முழங்கால் வலி இருக்கா? கற்பூரவள்ளி ஒன்னு போதுமே.. மூட்டு வலியை விரட்டியடிக்கும் 10 டிப்ஸ்கள் பாருங்க

Posted by - December 20, 2023 0
சென்னை: பாடாய் படுத்தும் முழங்கால் வலி, மூட்டுவலிக்கு எளிய முறையிலேயே நிவாரணம் தேடலாம்.. அந்தவகையில், வீட்டிலிருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே, தீர்வை காணலாம். முழங்கால் வலி, மூட்டுவலிகளுக்கு…

காரைக்குடியில் பேக்கரி கடையில் பயங்கர தீ விபத்து- ரூ.40 லட்சம் பொருட்கள் சேதம்

Posted by - July 10, 2023 0
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனி வாசல் பகுதியில் பிரபல பேக்கரி கடை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சமையல் கூடத்தில் இன்று காலை ஊழியர்கள் நாகராஜ், திருப்பதி…

மழை மேகங்கள் நகரும் ரூட் இதுதான்… இந்த மாவட்டங்களில் கனமழை… வெதர்மேன் எச்சரிக்கை

Posted by - January 8, 2024 0
டெல்டாவில் இருந்து மழை மேகங்கள், விழுப்புரம் நோக்கி நகர்ந்து வருவதால்,  அடுத்த சில மணி நேரத்துக்கு தென் சென்னையின் புறநகர் பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவற்றில்…

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

Posted by - May 17, 2025 0
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகனிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய…

நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் மரணம்

Posted by - December 8, 2022 0
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல்நலக் குறைவால் காலமானார். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சென்னை: தமிழ் திரைப்பட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *