பொதுமக்களே கவனம்… அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்…

282 0

சென்னை:

நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:-

செப்டம்பர் 30-ந்தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு பரிந்துரையாளர் (நாமினி) ஒருவரின் பெயரை குறிப்பிடுவது கட்டாயம் ஆகும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் உங்கள் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுக் கணக்குகளுக்கும் இது பொருந்தும். 2023-24ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் மத்திய அரசு டி.சி.எஸ். கட்டணங்களை 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்ளது.october 1 new rules: அக்டோபர் 1 முதல் இது எல்லாம் மாற போகுது! ரெடியா  இருங்க!! - from october this 8 big rules will change | The Economic Times  Tamil

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இனி ரூ.7 லட்சத்திற்கும் மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்யும் பணத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த நேரிடும். ரூ.7 லட்சத்துக்கும் குறைவான செலவினங்களுக்கு 5 சதவீதம் டி.சி.எஸ். செலுத்த வேண்டும். ரூ.7 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் அக்டோபர் 1 முதல் 20 சதவீதம் டி.சி.எஸ். செலுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு கல்விக்காக கடன் பெறுபவர்களுக்கு ரூ.7 லட்சம் வரம்புக்கு மேல் 0.5 சதவீத குறைந்த டி.சி.எஸ். விகிதம் விதிக்கப்படும். மேலும் மருத்துவம் மற்றும் கல்வி போன்ற செலவுகள் ஏற்படும் பட்சத்தில் டி.சி.எஸ். 5 சதவீதமாக வசூலிக்கப்படும்.

மியூச்சுவல் பண்டுகளை போலவே டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் வாடிக்கையாளர்கள் நாமினியை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் கணக்குகளில் ஆதார் எண்ணை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிப்பின்படி நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். அக்டோபர் 1-ந்தேதி முதல் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் பொதுமக்கள் தங்கள் கைகளில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.

தேசிய தலைநகர் பிராந்தியத்தில், டீசல் ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆய்வை காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் மேற்கொண்டு உள்ளது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகள் உள்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த இந்த ஆணையம், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட இந்த அட்டவணை வருகிற 1-ந்தேதி முதல் கடுமையாக பின்பற்றப்படும். அக்டோபர் 1-ந்தேதி முதல் பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது. அக்டோபர் 1-ந்தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துகள் குறித்த புகைப்படம் ஜியோ கோ-ஆர்டினேட்ஸோடு எடுக்கப்பட்டு, ஆவணமாக இணைக்க வேண்டும். பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல அக்டோபர் 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ சாதனங்களை கோவில் நுழைவாயிலில் உள்ள படிப்பாதை, மின் இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கைபேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்லலாம். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த சட்டம் 2023 மசோதா மக்களவை மற்றும் மேல்சபையில் நிறைவேற்றப்பட்டது.

பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம் 2023, வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரஉள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அரசின் சேவைகளுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ள முடியும். அக்டோபர் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு, அரசுப்பணி நியமனம் ஆகியவற்றிற்கு ஒரே அரசு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்த முடியும்.

அரசு வேலைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியம். அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேருவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது. பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்யும் புதிய சட்டத்திருத்தம் அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலாகிறது.

Related Post

பிடிஆர் வசமாகும் 2 முக்கிய இலாகாக்கள்..! ஸ்டாலின் புது கணக்கு – ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?

Posted by - April 25, 2025 0
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கணுமா? அப்ப இந்த ஆரோக்கியமான உணவுகளை குறைவாக சாப்பிடுங்க…!

Posted by - October 25, 2023 0
சிறுநீரக கற்கள், அல்லது சிறுநீரக கால்குலி, சிறுநீரகங்களில் உருவாகக்கூடிய வலிமிகுந்த கனிம குவிதல் ஆகும். கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சிறுநீரில் உள்ள சில…

மாதம்பட்டி ரங்கராஜ் யார் என்று தெரியுமா?- அழகிய குடும்ப போட்டோ

Posted by - May 2, 2024 0
குக் வித் கோமாளி 5 தொழில் வளர்ச்சி என்பது அனைவருக்குமே எடுத்தவுடன் வெற்றி தராது, அதற்காக நிறைய முயற்சி, உழைப்பை போட வேண்டும். அப்படி ஆரம்பத்தில் இருந்து…

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

Posted by - November 22, 2025 0
புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *