மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

214 0

தஞ்சாவூர் :

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொதுமக்கள் தங்களை குறைவாக தெரிவிக்கலாம். துறைகளில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு நிவாரணம் பெற முடியும்.இறுதி காலம் எப்படி
அதன்படியே ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாம் நடக்கும். அதில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வினையும் மாவட்ட ஆட்சியர்கள் வழங்குவார்கள்.

கதறிய மூதாட்டி அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தோளில் ஒரு பையுடன் மூதாட்டி ஒருவர் வந்தார். அவர் அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது, “என் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க”.. நான் ஒருத்தியா வந்திருக்கேன்.. என்னை கவனிக்க ஆள் இல்லை. என் மருமகள் என்னை அடிக்கிறாள். என்னை அடித்ததில் என் மண்டையில் காயம் ஏற்பட்டது (காயத்தை காட்டினார்).

கோர்டுக்கு போனேன் நான் கோர்டுக்கு போனேன். அவங்க எனக்கு 3 வேளை சோறுபோடச் சொன்னாங்க.. 2 ஆயிரம் ரூபாய் பணம் தரச்சொன்னாங்க.. பெண்ணை எல்லாம் கட்டிக்கொடுத்தாச்சு.. அவங்க வரக்கூடான்னுட்டாங்க. என் பைனும் கல்யாணம் ஆன பின்னாடி கவனிக்கல.. என்னை கவனிக்கவே இல்லை. சொத்தை எல்லாம் வித்துட்டாங்க.. எனக்கு கொடுக்குற காசு பத்தல.. கவனிகக்க ஆள் இல்லாம கஷ்டப்படுறேன்.. என்னை கவனிக்க ஆள் இல்லை” என்று மீண்டும் மீண்டும் கதறி அழுதபடி கூறியபடி இருந்தார். அவர் பெயர் என்ன, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதை அவர் கூறவில்லை. இது தொடர்பாக சமூக ஊடங்களில் வீடியோ பகிரப்பட்டுள்ளது.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல இந்த வீடியோவை பார்த்த மக்கள் பலரும், இந்த நிலைமை தான் நாளை அவர்களுக்கும் நடக்கும் என்று கூறிவருகிறார்கள். சிலர், சொத்தை எல்லாம் பாட்டியின் பெயரில் மாற்றி கோடுக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இதை பார்த்தாவது கையில் பணம் கடைசிவரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். தற்போதைய தலைமுறைக்கு பணம் மட்டுமே தன் வாழ்வாதாரத்தை மற்றும் என்பது தவறு என இன்னொரு நெட்டிசன் கூறினார். அவர்கள் குழந்தைகளால் விரைவில் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

இறுதி காலம் எப்படி சமூக ஆர்வலர்கள் கூறும் போத, இளைஞர்களாக இருக்கும் காலத்தில் கஷ்டப்பட்டு உழைத்து சொத்தை சேர்க்கும் பெற்றோர், கடைசி காலத்தில் சொத்துக்களை எல்லாம் பிள்ளைகள் பெயரில் எழுதி வைப்பது தவறு. அவர்கள் இல்லாத காலத்திற்கு பின்பே சொத்துக்களையோ பணத்தையோ பிரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உயிருடன் இருக்கும் வரை மரியாதை கிடைக்கும்.

அதேபோல் இளம் வயதில் பெற்றோர்கள் நன்றாக சம்பாதித்து செலவழித்துவிடாமல் கடைசி காலத்திற்கு வேண்டும் என்று கொஞ்சமாவது மாதம் மாதம் சேமித்து வைக்க வேண்டும். அந்த சேமிப்பை அவர்கள் யாரும் தராமல் அவர்கள் தங்கள் கைப்பட கடைசி காலம் வரை வைத்திருந்து வாழ்வது நல்லது. அப்படி செய்தால் இறுதி காலம் மரியாதையாகவும், மதிப்புடனும் இருக்கும். பிள்ளைகளிடம் ஒரு வேளை சோற்றுக்கு கையேந்தி நிற்கும் நிலை வந்தால், அது இறுதிகாலதத்தை கடினமாக்கிவிடும் என்கிறார்கள்.

Related Post

இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை கிடைக்குமா..? இன்று தெரிந்துவிடும்..!

Posted by - January 30, 2023 0
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின்…

இன்ஸ்டாகிராம் காதல் !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்….

Posted by - March 18, 2026 0
சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது. இன்ஸ்டாகிராம் சிறுமியுடன் பழக்கம்  சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அருண்…

திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?

Posted by - March 13, 2025 0
திமுக தலைமயிலான தற்போதைய தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். தமிழ்நாடு அரசு பட்ஜெட்: மத்திய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து, தமிழ்நாடு…

இன்றுடன் விடைபெறும் 2022.. புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Posted by - December 31, 2022 0
New Year 2023: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 2022 ஆம் ஆண்டு இன்றுடன் விடை பெறும் நிலையில், புத்தாண்டை கொண்டாட மக்கள் உற்சாகமாக…

‘டீ’ யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி ; விஷமாக மாறிய காதல்… கம்பி என்ன வைத்த போலீஸ்

Posted by - March 4, 2025 0
காதலை கைவிட நினைத்த காதலனுக்கு டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற காதலி. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் சட்டக்கல்லூரி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *