மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்

221 0

ராமேசுவரம்

ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா

இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் 7-ம் நாள் விழா இன்று நடக்கிறது. திருவிழாவின் 8-வது நாளான நாளை(சனிக்கிழமை) மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

நாளை பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும். மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அதுபோல் நாளை மறுநாள் 19-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது. திருவிழாவின் 9-வது நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இதே போல் ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர்கோவில், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது.

Related Post

செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டகளில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி

Posted by - December 8, 2023 0
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 7.39 மணி அளவில் ஏற்பட்ட…

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்- காரணம் என்ன?

Posted by - March 3, 2023 0
சென்னை: தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள…

M. K. Alagiri : “மீண்டும் திமுகவில் மு.க.அழகிரி?” மன்னிப்பு கடிதம் கொடுத்த ஆதரவாளர்கள்..!

Posted by - December 13, 2024 0
”கண்கள் பனித்து, இதயம் இனித்த நிலையில், மு.க.அழகிரி எப்போது வேண்டுமானாலும் திமுகவில் இணைத்துக்கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது” ஒரு காலத்தில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை கட்டி ஆண்டவராக…

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Posted by - September 26, 2023 0
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்…

தமிழகத்தில் நடமாடும் போதைப்பொருட்கள் – கொதிக்கும் ஓபிஎஸ்

Posted by - March 2, 2024 0
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாடும் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *