தமிழகத்தில் நடமாடும் போதைப்பொருட்கள் – கொதிக்கும் ஓபிஎஸ்

215 0

தமிழகத்தில் போதைப் பொருள் நடமாடும் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

தி.மு.க. ஆட்சி என்றாலே, குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை, வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம், சமூக விரோதிகளின் நடமாட்டம் ஆகியவை அதிகரிப்பது வாடிக்கை என்றிருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்களின் விற்பனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தீய சக்திகளின் நடமாட்டம் தமிழ்நாட்டில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளரின் வீடு, தங்கும் விடுதி மற்றும் அலுவலகங்களில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதோடு, அவற்றிற்கு சீல் வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தி.மு.க. மாவட்டச் செயலாளர் வீட்டில் சோதனை நடப்பதாக தகவல் வெளியானதையடுத்து, பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற நிலையில், அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தி.மு.க.வினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. மொத்தத்தில், தி.மு.க.வினர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தி.மு.க.வினரின் இந்தச் செயல் தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் செயலாகும்.

இந்த நிலையில்,கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்கி, அவற்றை சிறிய பொட்டலங்களில் வைத்து அதில் இனிப்புப் பண்டங்களை சேர்த்து பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், டெல்லியிலிருந்து இரயில் மூலம் மதுரைக்கு கடத்தப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமின் போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத் இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இளைஞர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கியதுதான் கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனை.

எதிர்காலத் தூண்களாகிய இளைஞர்களின் நலனில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை மேற்கொண்டவர்கள் மற்றும் இதன்மூலம் பயனடைந்தவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

மாஸ்க், தடுப்பூசி, ஆக்சிஜன் எல்லாத்தை ரெடி பண்ணுங்க.. மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

Posted by - December 27, 2022 0
கொரோனா தடுப்பூசி மையம் போதிய மருத்துவ பணியாளர்களுடன் தயாராக இருக்க மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை…

1 ரூபாய் அனுப்பி பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ‘கூகுள் பே’ மூலம் ரூ.65 ஆயிரம் மோசடி

Posted by - March 10, 2023 0
தூத்துக்குடி: நவீன யுகத்தில் தொழில்நுட்பங்கள் வளர, வளர இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஆன்-லைன் மோசடி மூலம் தனி…

10% காவல் அதிகாரிகளை தவிர அனைவருமே போதை பொருள் கடத்தலுக்கு உடந்தை – பகீர் கிளப்பிய டாக்டர் ராமதாஸ்..!!

Posted by - September 20, 2024 0
போதை பொருள் கடத்தலுக்கு 850 போலீஸ் அதிகாரிகள் உடந்தை என்ற செய்தி தவறு. காவல்துறையில் உள்ளவர்களில் 10 சதவிதம் தவிர அனைவரும் உடந்தை என பாட்டாளி மக்கள்…

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவும் ‘அய்யன்’ மொபைல் செயலி: DOWNLOAD APP LINK.

Posted by - December 26, 2023 0
சென்னை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்நிலையில், மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் ‘அய்யன்’…

இன்ஸ்டாகிராம் காதல் !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்….

Posted by - March 18, 2026 0
சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது. இன்ஸ்டாகிராம் சிறுமியுடன் பழக்கம்  சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அருண்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *