மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரில் ஆய்வு

316 0

பிரதமர் மோடியின் அறிவுரையின்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடி வருகிறார்.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் பதிவில், “மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 26-ந்தேதி (நாளை) மதியம் 2.30 மணிக்கு தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.

முன்னதாக மதியம் 12.30 மணிக்கு வெள்ள பாதிப்புகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்” என கூறப்பட்டுள்ளது.

டிச.26-இல் தூத்துக்குடி வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!,  nirmala-sitharaman-to-visit-thoothukudi-on-dec-26
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் நிர்மலா சீதாராமன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.

தூத்துக்குடி டவுன், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை பார்வையிடுகிறார்

ஏற்கனவே மத்திய குழுவினர் வெள்ளம் வடிவதற்கு முன்பே நேரில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகு மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் நிவாரண நிதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Posted by - December 6, 2024 0
கள்ளக்குறிச்சி மாவட்டம், சோழவரம் அருகே கூலிப்படையை ஏவி, கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்…

அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?

Posted by - June 18, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் அமர தீவிர நடவடிக்கையில் உள்ளனர். ஆளுங்கட்சியான…

திடீரென விற்கப்படும் விஜய் டிவி- போட்டிபோடும் TV நிறுவனம்…

Posted by - August 2, 2023 0
விஜய் டிவி தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது விஜய். ஸ்டார் குழுமம் அந்த தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது, அதன்பின் அதை உலக அளவில்…

துபாயில் வீடா, கார் ரேஸ் எனக்கா? – கொந்தளித்து பேசிய நிவேதா பெத்துராஜ்

Posted by - March 6, 2024 0
தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் கார் பந்தயம்…

எண்ணெய் நிறுவன கழிவுகளை மீனவர்கள் அள்ளுவதா? அப்பாவி மக்களைப் பலியாக்குவதா? சீமான் கண்டனம்

Posted by - December 15, 2023 0
சென்னை: சென்னை அருகே எண்ணெய் நிறுவனத்தின் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்களை அள்ள சொல்வதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *