மன்சூர் அலிகானிடம் விரைவில் விசாரணை: சம்மன் அனுப்பி அழைக்க இருப்பதாக போலீசார் தகவல்

198 0

சென்னை:

நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மன்சூர் அலிகான் மீது தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் நேற்று பிற்பகல் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மன்சூர் அலிகான் மனைவி போலீசில் புகார்| Mansoor Alikhan Wife354-ஏ, ஐ.பி.சி. (பெண்களின் உணர்வுக்கு குந்தகம் விளைவித்தல்), 509 ஐ.பி.சி. (பெண்களை இழிவுபடுத்தி பேசுவது) ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த 2 சட்டப் பிரிவுகளும் 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அனுபவிக்கக் கூடிய சட்டப் பிரிவுகளாகும். இந்த வழக்கில் மன்சூர் அலிகான் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, ‘மன்சூர் அலிகானிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்ப உள்ளோம். இந்த சம்மன் இன்று அனுப்பப்படும். மன்சூர் அலிகானை போலீஸ் நிலையத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் பின்னர்தான் அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

மன்சூர் அலிகானின் வீடு நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது. அவரது வீடு இருக்கும் எல்லையில் உள்ள ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார்தான் திரிஷா மீதான அவதூறு கருத்துக்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். திரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேட்டி அளித்த வீடியோ மற்றும் அதன் பிறகு அவர் பேசிய வீடியோக்கள் ஆகியவைகளை இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாக போலீசார் கருதுகிறார்கள். வழக்கின் முக்கிய ஆவணங்களாக மன்சூர் அலிகான் பேசியுள்ள இந்த ஆடியோக்களை சேர்க்க உள்ளனர்.

இதற்காக அவர் பேசிய வீடியோக்களையும் போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது இந்த வீடியோக்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகர் சங்கம் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள நிலையில், போலீசார் அவர் மீது வழக்கு போட்டிருப்பதால் அவர் மீதான பிடி இறுகியுள்ளது.

 

Related Post

ராமதாஸ் ஐசியுவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை: மருத்துமனையில் அன்புமணி பேட்டி

Posted by - October 6, 2025 0
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதயம் தொடர்பான…

இவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted by - January 25, 2023 0
2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி…

#RainAlert : அடுத்த 3 மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Posted by - October 14, 2024 0
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தென் மண்டல வானிலை ஆய்வு…

பிரமாண்டமான தனி விமானம் வாங்கிய நடிகர் சூர்யா.. இதன் விலை எத்தனை கோடி தெரியுமா

Posted by - August 23, 2024 0
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சிறுத்தை சிவா…

கோகுல் ராஜ் கொலை வழக்கில் மீண்டும் பிறழ்சாட்சி சொன்ன சுவாதி.. கடைசி வாய்ப்பு கொடுத்த நீதிபதி

Posted by - November 26, 2022 0
மாவட்ட நீதிபதியிடம் பதில் அளித்து விட்டு தற்போது தெரியாது என்றால் என்ன? நீதிமன்றம் விளையாட்டு மைதானமா? – நீதிபதி கேள்வி கோகுல்ராஜ் கொலை வழக்கில் இன்று ஆஜரான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *