முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி – அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி

118 0

பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாட்டினை, திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவின் முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா? எனவும் கிண்டல் செய்து வருகின்றனர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல்:

மதுரையில் பாஜகவின் மற்றொரு பிரிவாக கருதப்படும் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில், முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோக பாஜகவின் கூட்டணியில் உள்ள அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முருக பக்தர்கள் மாநாடு என்று கூறினாலும், இதில் முற்றிலுமான அரசியல் நெடியே வீசியது. அப்போது நடந்த சில நிகழ்வுகளுக்கு எந்தவித கருத்தும், ஆட்சேபனையும் கூட தெரிவிக்காமல்  முன்னாள் அமைச்சர்கள் அமைதியாக இருந்ததே, தற்போது அதிமுகவின் மீதான விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது.

சைலண்ட் மோடில் முன்னாள் அமைச்சர்கள்:

மாநாட்டு திடலில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒன்றில், “முருகா திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதனை குறிப்பிட்டு. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்னு பேரு வச்சிருக்கிங்க. அவன் என்னடான்னா திராவிடத்தை அழிக்கனும்னு பேனர் வெச்சிட்டு இருக்கான். அத பாத்து எப்படியா எதுவுமே பேசாமா சைலண்ட இருக்கிங்க?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ”அந்த அம்மா இருந்திருந்தா இப்படிலாம்நடந்து இருக்குமா?” என கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து இருக்கின்றனர்.

”வீடியோவிற்கும் வாய் திறக்கல”

பேனர் ஒருப்பக்கம் சர்ச்சையை கிளப்ப, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றும் அதிமுகவினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அதிமுக தனது கொள்கை தலைவர்களாக கொண்டிருக்கும் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் விமர்சிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அதற்கு கூட அதிமுகவினர் எந்தவித கருத்தும் ,ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்ததும் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்காகவும் பேசமாட்டீர்கள்? கட்சி கொள்கை தலைவர்களுக்காகவும் பேசமாட்டீர்களா? அதிமுகவை மொத்தமாக பாஜகவிடம் அடகு வைத்துவிட்டீர்களா? என்றும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். வழக்குகளுக்கு பயந்து தான் வேண்டா வெறுப்பாகவே பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைத்து இருப்பதையே இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன என்றும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

Related Post

பட்டுபோன்ற மென்மையான நீளமான கூந்தலை பெறணுமா? அப்ப ‘இந்த’ 7 உணவுகளை மறக்காம சாப்பிடுங்க!

Posted by - December 26, 2023 0
ஆண், பெண் என அனைவரும் தங்கள் தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறார்கள். நவீன வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால், தலைமுடி பாதிப்படைகிறது.…

அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!

Posted by - December 18, 2024 0
அம்பேத்கர் பெயரை, உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக்கொண்டே இருப்போம் என தவெக தலைவர் விஜய் , மத்திய அமைச்சர் அமித்சாவைக் கண்டித்துள்ளார். அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை…

கள்ளக்காதல் ஜோடியை திட்டம் போட்டு சிக்க வைத்த வாலிபர்கள்: இளம்பெண் தற்கொலை முயற்சி

Posted by - November 21, 2023 0
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர்…

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 3 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

Posted by - September 15, 2023 0
சென்னை: நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி…

உங்கள் கனவில் முருகன் வந்தாரா? அப்போ இதுதான் அர்த்தம் பக்தர்களே!

Posted by - November 11, 2025 0
முருகப்பெருமான் உங்கள் கனவில் தோன்றினால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழ்க் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். தைப்பூசம், கார்த்திகை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *