மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம் கருத்துக் கணிப்பில் தகவல்..!

299 0

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை கடந்த 25ஆம் தேதி அசாமில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்துள்ளார்.

இன்னொரு புறம், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.இந்த நிலையில், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்று ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் நடத்திய கருத்துக் கணிப்பில் 49 சதவீதம் பேர் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது தெரியவந்துள்ளது.18 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 6 சதவீதம் பேரும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சதவீதம் பேரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.மேலும் மற்றொரு கருத்துக் கணிப்பில், பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி மிகவும் திருப்திகரமாக இருப்பதாக 73.02 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 62.05 சதவீதமாகவும், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 82.96 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.ஐந்தில் மூன்று இந்தியர்கள் பிரதமர் மோடி வலிமையான முடிவுகளை எடுப்பதாக சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Related Post

இந்த போன்லலாம்…WhatsApp செயல்படாதாம்…எந்தெந்த மொபைல்னு பாத்துக்கோங்க…!

Posted by - December 14, 2024 0
WhatsApp என்பது ஒரு குறுஞ்செய்தி தகவல் பரிமாற்ற சாதனம், ஒரு தகவலையோ, ஒரு போட்டோவையோ, ஒரு  ஆவணங்களையோ உடனடியாக ஒருவருக்கு அனுப்புவதற்கும் பொழுது போக்கிற்கும் உகந்த ஒரு…

ராஜஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு

Posted by - June 7, 2023 0
ராஜஸ்தா் மாநிலம், பிகானேர் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகியுள்ளது. பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில்…

தமிழகத்திற்கு தண்ணிர் திறந்து விட முடியாது : கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி!

Posted by - July 13, 2024 0
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார்…

கேரளாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா பாதிப்பு- 3 பேர் உயிரிழப்பு

Posted by - December 21, 2023 0
நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது…

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன ஆச்சு தெரியுமா?

Posted by - May 1, 2023 0
பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *