ரஜினி, அஜித்துக்கு இன்று புகழாரம்.. அன்று வசைபாடு! சீமானை விளாசும் தவெக பாய்ஸ்..!

168 0

சீமான் தனது கடந்த காலத்தில் ரஜினி, அஜித்தை விமர்சித்ததையும், விஜய்யை அரசியலுக்கு அழைத்த வீடியோவையும் தவெக தொண்டர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடு பிடித்திருப்பதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவரது தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விஜய்யை அட்டாக் செய்யும் சீமான்:

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவருக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்து வந்த சீமான், அவரது வருகைக்கு பின்பு அவர் தமிழ் தேசியமும், திராவிடமும் எனது இரு கண்கள் என்று கூறிய பிறகு அவரை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக, தற்போது திராவிட கட்சிகளை காட்டிலும் விஜய் மீது அதிகளவு விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.

ரஜினி, அஜித்தை புகழ்ந்த சீமான்:

விஜய்க்கு திருச்சியில் வந்த கூட்டத்தை காட்டிலும் ரஜினிகாந்த், அஜித்திற்கு அதிக கூட்டம் வரும் என்று பேசினார். விஜய்யைப் போன்ற உச்ச நட்சத்திரங்களான அஜித்தையும், ரஜினியையும் விஜய்யை குறைத்து மதிப்பிடுவதற்காக அவர்களை ஒப்பிட்டு பேசினார். இதையே தற்போது விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிரான அஸ்திரமாக மாற்றி வருகின்றனர்.

பழைய வீடியோக்களை வைரலாக்கும் விஜய் ரசிகர்கள்:

சீமான் தனது தொடக்க கால அரசியல் களத்தில் பெரும்பாலானோரை மிக கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக, ஒருமையில் பேசினார். அந்த வீடியோக்கள் தற்போது பகிரப்பட்டு சீமானுக்கு கேள்விகளை தவெக தொண்டர்கள் எழுப்பி வருகின்றனர். சீமான் பல ஆண்டுகளுக்கு முன்பு அஜித் பற்றி பேசிய வீடியோவில், அஜித்தை சிலர் தருதலைகள் தல, தல என்று சொல்கிறார்கள் என்று பேசியதும், ரஜினிகாந்த் தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறியதற்கு சுடுகாட்டில் கூட வெற்றிடம் இருக்கிறது என்று சீமான் பேசியதையும் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், விஜய்யை யார் அரசியலுக்கு அழைத்தது? என்ற சீமான் பேசியதற்கும் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்பு என் தம்பி விஜய் 2026 தேர்தலுக்கு வருவான் என்று சீமான் பேசியதையும் பதிவிட்டு பதிலாக தவெக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சீமானின் வாக்கு வங்கிக்கு ஆபத்து?

விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் கூட்டணி வைத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணக்கிட்ட சீமானுக்கு, விஜய் தனது கொள்கைத் தலைவராக பெரியாரை கூறியது மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியது. மேலும், கட்சி தொடங்கிய பிறகு விஜய் கூட்டணிக்கு வெளிப்படையாக அழைத்தது திருமாவளவனை மட்டுமே ஆகும்.

சீமான் பற்றிய விமர்சனங்களுக்கு அவர் தனது பேச்சில் கூட பதிலளிக்காமல் தவிர்த்து வருகிறார். மேலும், விஜய் தனக்கு போட்டி திமுக மட்டுமே என்றும் மீண்டும் மீண்டும் தனது பேச்சில் பதிவு செய்து வருகிறார். இதுவும் சீமானின் மிகப்பெரிய அதிருப்திக்கு காரணமாக கருதப்படுகிறது.

 

Related Post

திமுகவை சுத்து போட்டு விளாசி விஜய் ஆவேச பேச்சு

Posted by - February 23, 2026 0
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் தான் போட்டி என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியுள்ளார். TVK Vijay Speech Vellore: தன் மீது…

தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு?

Posted by - April 3, 2026 0
தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், ஜென் இசெட் (Gen Z) வாக்காளர்கள் முக்கியமான தீர்மான சக்தியாக உருவெடுத்துள்ளனர். சுமார் 1 கோடியே 18 லட்சம்…

போலி வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி நடைபெறுகிறது – எல்.முருகன் விளக்கம்!

Posted by - November 19, 2025 0
போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டை வாக்காளர்களை நீக்கவே S.I.R பணி மேற்கொள்ளப்படுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளின்…

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

Posted by - August 22, 2025 0
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் விஜய்-க்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், அதிமுக யாரிடம் இருக்கிறது என்று…

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

Posted by - March 24, 2026 0
நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *