லியோவில் விஜய்யுடன் மோத போகும் மற்றும் ஒரு நடிகர்..லோகேஷ் செய்யப்போகும் தரமான செய்கை!!

213 0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இணைந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என கோலிவுட் முதல் பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த அளவுக்கு மவுசு மிக்க இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

 

 

இவர் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க, சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறது.

லியோ படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இப்படத்தின் புரோமோவிற்காக அவர் இசையமைத்த ஆங்கிலப் பாடல் கூட ஹிட் ஆனது.

லியோ படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை அப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. குறிப்பாக காஷ்மீரில் 50 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தியுள்ள படக்குழு, எஞ்சியுள்ள 50 சதவீத படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

லியோ படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், படத்தின் பணிகள் நான் ஸ்டாப் ஆக நடைபெற்று வருகிறது.

 

 

இந்நிலையில், லியோ படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் இப்படத்தில் நடிகராக கமிட் ஆகவில்லையாம். அவரை பின்னணி குரல் கொடுப்பதற்காக லோகேஷ் அணுகி உள்ளாராம்.

இதற்காக விஜய் சேதுபதியிடம் மூன்று நாட்கள் கால்ஷீட் கேட்டு உள்ளாராம் லோகேஷ். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி இதற்கு ஓகே சொல்லிவிடுவார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாப்போம் என்ன நடக்க போகுதுன்னு…

 

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள pixeltamil.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க…

Related Post

ருத்ரன் – திரை பார்வை…

Posted by - April 15, 2023 0
5 ஸ்டார் கதிரேசன் தயாரித்து முதல் முறையாக இயக்கி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ருத்ரன். ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர்,…

அடுத்த படத்தில் அட்லீ விஜய்க்கு இவ்ளோ சம்பளமா!.. பிரமிக்கவைக்கும் சம்பள விவரம்

Posted by - April 18, 2023 0
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்…

ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் அஜித் குமார்!! விடாமுயற்சி படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு…

Posted by - December 17, 2024 0
கடுமையான உணவு கட்டுப்பாடு மூலம் தனது உடலையே 30 கிலோ வரை அஜித் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை…

அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்..

Posted by - September 13, 2023 0
விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின்…

ஜவான் படம் எப்படி இருக்கு.. படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம்

Posted by - September 7, 2023 0
ஜவான் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள அட்லீ முதன் முதலில் இயக்கியுள்ள படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *