ருத்ரன் – திரை பார்வை…

349 0

5 ஸ்டார் கதிரேசன் தயாரித்து முதல் முறையாக இயக்கி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ருத்ரன்.

download 1 2ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 4 வருடங்களுக்கு பின் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று தான் திரைப்படம் வெளிவந்துள்ளது.

 

 

இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ருத்ரன் படம் பூர்த்தி செய்ததா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.

கதைக்களம்

தனது தாய் பூர்ணிமா பாக்கியராஜ், தந்தை நாசருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ருத்ரன் {ராகவா லாரன்ஸ்}. குறிப்பாக தனது தாயின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரை சந்திக்கும் ருத்ரன் காதலில் விழுகிறார். இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில், ருத்ரனின் தந்தைக்கு பிரச்சனை வருகிறது.

 

 

தனது நண்பனை நம்பி 6 கோடி கடன் வாங்கினார் நாசர். ஆனால், அவர் நாசரை ஏமாற்றிவிட்டு 6 கோடி பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். கடன் கொடுக்க முடியாமல் நண்பனின் துரோகத்தை தாங்க முடியாமல் மரணடைகிறார்.

நாசரின் மரணத்திற்கு பின், வாங்கிய 6 கோடி கடனை வட்டியுடன் 7 கோடியாக திருப்பி கொடுக்க வேண்டுமென கடன் கொடுத்தவர் கேட்க, தந்தையின் டிராவல்ஸ் நிறுவனத்தை விற்று 3 கோடி ரூபாய்யை முதலில் கொடுக்கிறார் ருத்ரன். பின் மீதமுள்ள 4 கோடி கடனை அடைக்க அதிக சம்பளம் கிடைக்கும் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார்.

 

இதற்கிடையில் பிரியா பவானி ஷங்கரை திருமணம் செய்யும் ருத்ரன் தனது தாய் மற்றும் மனைவியை விட்டு பிரிந்து வெளிநாட்டிற்கு செல்கிறார். 6 வருடங்களுக்கு பின், சென்னைக்கு மீண்டும் வருவதற்கு 3 மாதங்கள் இருக்கும் நிலையில் ருத்ரனின் தாய் மரணமடைகிறார். மனைவி பிரியா பவானி ஷங்கர் காணாமல் போகிறார்.

ருத்ரன் தாய் எப்படி இறந்தார்? பிரியா பவானி ஷங்கருக்கு என்ன நடந்தது? இதன் பின்னணி என்ன என்பதை ருத்ரன் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

ஹீரோவாக வரும் ராகவா லாரன்ஸ் ஆக்ஷன், காதல், பாசம், செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளிலும் சூப்பராக நடித்துள்ளார். குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். ராகவா லாரன்ஸ் தாயாக நடித்துள்ள பூர்ணிமா பாக்கியராஜின் நடிப்பு படத்திற்கு பலம்.

 

 

மனைவியாக வரும் பிரியா பவானி ஷங்கர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். முழுமையான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரத்குமாரின் நடிப்பு மிரட்டல். மற்றபடி அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்கள்.

முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு வாழ்த்துக்கள். எடுத்துக்கொண்ட கதைக்களம், சொல்ல வந்த கருத்து இரண்டையும் சிறப்பாக செய்துள்ளார். ஆனால், திரைக்கதையில் சற்று சொதப்பிவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்.

 

நம்பவே முடியாத ஆக்ஷன் காட்சிகள், ஓவர் மசாலா, பார்த்து பார்த்து சலித்துப்போன பழிவாங்கும் கதை என கமெர்ஷியல் விஷயங்கள் தான் படத்தில் நிரம்பி இருக்கிறது. ஆனால், தாய் தந்தையை தனியாக விட்டுவிடாதீர்கள் என கதிரேசன் சொல்ல வந்த கருத்து, இன்றைய காலகட்டத்தில் தேவைப்படும் விஷயமாக இருக்கிறது. அதற்க்கு பாராட்டுக்கள்.

முதல் பாதி சற்று தொய்வாக இருந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி செம மாஸ்.

 

ஜி.வி. பிரகாஷ் குமாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே சூப்பர். குறிப்பாக கிளைமாக்ஸ் பாடல் வெறித்தனமாக இருந்தது. ஒளிப்பதிவு கலர்ஃபுல். எடிட்டிங் ஓகே. ஸ்டண்ட் இன்னும் கூட மசாலாவை குறைத்திருக்கலாம்.

பிளஸ் பாயிண்ட்

ராகவா லாரன்ஸ் நடிப்பு

பூர்ணிமா பாக்கியராஜ், சரத்குமார் நடிப்பு

கதைக்களம்

சொல்ல வந்த கருத்து

மைனஸ் பாயிண்ட்

காலங் காலமாக பார்த்து சலித்து போன பழிவாங்கும் கதை

நம்பவே முடியாத ஆக்ஷன் காட்சிகள்

மொத்தத்தில் கமர்ஷியல் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து தான் இந்த ருத்ரன். vd

 

Related Post

WATCH – “மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கனும்..” வெளியானது வாரிசு ட்ரெய்லர்.. வேற லெவலில் விஜய்!

Posted by - January 4, 2023 0
Varisu – Official Trailer | வாரிசு திரைப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12-ம் தேதி வெளியாகும் என்று…

நடிகை சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிள் ஏலத்தில் எவ்வளவு விலைபோனது தெரியுமா?

Posted by - September 22, 2023 0
சில்க் ஸ்மிதா தமிழ் சினிமா நெஞ்சங்களில் என்றும் இளவரசியாக வாழ்ந்து வருபவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் பேரழகு கொண்டவர் என்ற வாக்கியம்…

இரத்தம் தெறிக்க.. அனல் பறக்க.. லியோவின் மாஸ் அப்டேட் வெளியீடு..!

Posted by - August 15, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத்,…

சன் டிவி-யில் விஜய்யின் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா!

Posted by - December 26, 2022 0
இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ள வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி புத்தாண்டை முன்னிட்டு…

எத்தனை மணிக்கு வருகிறது துணிவு ட்ரெய்லர்? அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - December 31, 2022 0
துணிவு துணிவு படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனம் தற்போது முழுவீச்சில் செய்ய தொடங்கி இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் அவர்களது கதாபாத்திர பெயர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *