லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? வெளியான வீடியோ அப்டேட்!

230 0

நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது..

பிரபல ஜவுளி மற்றும் ஷாப்பிங் கடையின் உரிமையாளராக இருப்பவர் லெஜெண்ட் சரவணன். சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர் ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை பிரபல விளம்பரப் பட இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? வெளியான வீடியோ அப்டேட்!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஊர்வசி ரவுத்தேலா, விவேக் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று லெஜெண்ட் சரவணன் கூறியிருந்தார். இதற்காக அவர் தயாராகி வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.தனது அடுத்த படத்திற்காக ஜார்ஜியாவில் நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது X தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் லெஜெண்ட் சரவணா. கொடி, பட்டாசு, கருடன் படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். பகிரப்பட்டுள்ள போட்டோவை பார்க்கும் போது ஆக்சன் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு போல் உள்ளது. மேலும், படத்தின் பெயர் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை, “லெஜெண்ட் சரவணாவின் ப்ரொடக்ஷன் நம்பர் 2” என்ற ஹேஷ்டேகுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.லெஜெண்ட் சரவணா அருகில் நடிகை பாயல் ராஜ்புத் கை குலுக்கி நிற்கும் புகைப்படமும் அதில் உள்ளது, இதை வைத்து படத்தின் நடிகை அவர்தான் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் நடிகை பாயல் ராஜ்புத்தின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். லெஜெண்ட் சரவணா நடிக்கும் இந்தப் படம் குறித்த மேலும் தகவலுக்கு நாம் காத்திருக்க வேண்டும்.

Related Post

விஜய்யால் தவறான பாதைக்கு செல்லும் ரசிகர்கள்.. கண்டித்தவர்களை எதிர்த்து பேசி பதிவு

Posted by - June 27, 2023 0
விஜய் விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருவதை நாம் அறிவோம். இப்படத்தில் இடம்பெறும் நான் ரெடி தான் வரவா பாடல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.…

தளபதி 68 பாடல் ரெடி.. கான்ஜூரிங் கண்ணப்பனில் வெளியான அப்டேட்

Posted by - November 18, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம்,…

மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பாடமே இந்த பறந்து போ!!!

Posted by - July 5, 2025 0
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வரும் ராம், இந்த முறை பெற்றோர்கள்-குழந்தைகளுக்கான ஒரு பீல் குட் ட்ராமவை பறந்து போ என்ற படம் மூலம் கொடுத்துள்ளார்,…

Intro உருவாக்கிக் கொடுத்து, வீழ்ந்து கிடந்த அரவிந்த்சாமிக்கு Come Back கொடுத்தது யார் தெரியுமா?

Posted by - December 18, 2024 0
ரஜினியின் தளபதி படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அப்படத்தில் கலெக்டர் வேடத்திலும் அவருக்கு தம்பியாகவும் நடித்திருந்தார். அதன் பின், மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதில், மதுபாலா,…

சிறுவயதில் விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவயது பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா இது?

Posted by - July 19, 2023 0
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் ஒரு நடிகர். இவரது படத்தை வியாபாரத்திற்கு எடுத்தால் கண்டிப்பாக லாபம் வரும் என்ற நம்பிக்கை அனைவருக்குமே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *