லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? வெளியான வீடியோ அப்டேட்!

231 0

நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது..

பிரபல ஜவுளி மற்றும் ஷாப்பிங் கடையின் உரிமையாளராக இருப்பவர் லெஜெண்ட் சரவணன். சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர் ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை பிரபல விளம்பரப் பட இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படம்.. ஹீரோயின் யாருன்னு தெரியுமா..? வெளியான வீடியோ அப்டேட்!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஊர்வசி ரவுத்தேலா, விவேக் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று லெஜெண்ட் சரவணன் கூறியிருந்தார். இதற்காக அவர் தயாராகி வந்த நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.தனது அடுத்த படத்திற்காக ஜார்ஜியாவில் நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது X தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் லெஜெண்ட் சரவணா. கொடி, பட்டாசு, கருடன் படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் தான் இந்த படத்தை இயக்குகிறார். மேலும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். பகிரப்பட்டுள்ள போட்டோவை பார்க்கும் போது ஆக்சன் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு போல் உள்ளது. மேலும், படத்தின் பெயர் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை, “லெஜெண்ட் சரவணாவின் ப்ரொடக்ஷன் நம்பர் 2” என்ற ஹேஷ்டேகுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.லெஜெண்ட் சரவணா அருகில் நடிகை பாயல் ராஜ்புத் கை குலுக்கி நிற்கும் புகைப்படமும் அதில் உள்ளது, இதை வைத்து படத்தின் நடிகை அவர்தான் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் படப்பிடிப்பு தளத்தில் நடிகை பாயல் ராஜ்புத்தின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். லெஜெண்ட் சரவணா நடிக்கும் இந்தப் படம் குறித்த மேலும் தகவலுக்கு நாம் காத்திருக்க வேண்டும்.

Related Post

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கவுள்ள பரிசு.. வெளிவரவிருக்கும் வெறித்தனமான அப்டேட்

Posted by - June 8, 2023 0
விஜய் பிறந்தநாள் வருகிற ஜூன் 22 நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள். இந்த நாளில் கண்டிப்பாக விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளிவரும் என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில்,…

பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்

Posted by - August 7, 2023 0
நடிகர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்காக தாராளமாக செலவு செய்து எடுப்பவர் அவர். தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்…

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Posted by - April 19, 2023 0
நடிகை சமந்தா இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் வெளிவந்த முதல் நாளில்…

ரஜினி பிறந்தநாள்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புகள்!

Posted by - December 12, 2025 0
 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் அசாதாரண நடிகர், இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் திரைப்பட உலகில் சாதனை படைத்த கதாபாத்திரங்கள் மூலம் அனைவருக்கும்…

கோட் படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.. POLITICAL சதி வேலை

Posted by - September 7, 2024 0
கோட்  படத்தை கழுவி ஊற்றி நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு ஒரு நல்ல கலகலப்பான என்டர்டைன்மென்ட் படமாக கோட் படத்தை கொடுத்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *