வார இறுதியை இந்த 9 படங்களோடு கொண்டாடுங்க..

258 0

இன்று தியேட்டரில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை, சூரி நடிப்பில் கொட்டுக்காளி ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே ஆடியன்ஸ் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதை நிறைவேற்றும் பொருட்டு இரு படங்களும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனால் அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களின் வரவும் அதிகரித்து வருகிறது. அதே போல் ஓடிடியை பொறுத்தவரையில் இந்த வாரம் 9 படங்கள் வெளியாகி உள்ளது.

அதில் பிரபாஸ் நடிப்பில் ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்த கல்கி அமேசான் பிரைம் தளத்தில் நேற்று வெளியானது. அதைத்தொடர்ந்து இன்று தனுஷின் ராயன் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

டிஜிட்டலுக்கு வந்த ராயன்

இதே தளத்தில் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை பற்றி வெளிவந்த ஜமா படமும் இன்று வெளியாகி இருக்கிறது. அதைத்தொடர்ந்து மலையாள படமான Grrr டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

மேலும் மலையாளத்தில் வெளிவந்த ஸ்வகரியம் சம்பவ பகுலம் சிம்ப்ளி சவுத் தளத்தில் வெளியாகியுள்ளது. அதேபோல் தெலுங்கு படமான விராஜி ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகி உள்ளது.

ஆங்கில படமான தி ஆக்சிடென்ட் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. நாளை ஹிந்தி படமான முஞ்சியா ஸ்டார் கோல்டு இந்தியா தளத்தில் வெளியாகிறது. அதேபோல் ஜியோ சினிமாவில் அபிகைல் திரில்லர் படமும் வெளியாகிறது.

இப்படியாக மேற்கண்ட படங்கள் இந்த வார இறுதியை மகிழ்விக்க வருகின்றன. இதில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் தியேட்டரைப் போல டிஜிட்டலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

ரீ ரிலீஸான தனுஷின் 3 – சிம்புவின் சிலம்பாட்டம்.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

Posted by - February 9, 2026 0
ரீ ரிலீஸ் தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக ரீ ரிலீஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. கில்லி, சச்சின், படையப்பா, மங்காத்தா ஆகிய…

கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்….யார் அந்த ஹீரோ?

Posted by - February 20, 2024 0
தமிழ் சினிமாவில் காமெடியை மையப்படுத்தி படங்கள் வருவது குறைந்துவிட்டது என்றே கூறலாம். படங்களில் அங்கங்கே காமெடி காட்சிகள் இருந்தது கூட இப்போது அவ்வளவாக இருப்பது இல்லை. மொத்தமாக…

சாதனை விலைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2…

Posted by - April 2, 2024 0
ஷங்கர் தெலுங்கில் இயக்கிவரும் கேம் சேஞ்சரின் முதல் பாடல், மார்ச் 27, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதனையொட்டி, சமூகவலைதளத்தில் பதிவிட்ட படத்தின் தில் ராஜு,…

திடீரென சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. என்னது இத்தனை கோடியா

Posted by - July 25, 2023 0
நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நயன்தாரா. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது ஜவான் படத்தின் மூலம்…

Goat படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.. காட்சியை பார்த்து அசந்துபோன பிரேமலதா

Posted by - May 14, 2024 0
Goat திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கி வரும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *