வீட்டுல முட்டை இருக்கா? இந்த மாதிரி தொக்கு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு பிரமாதமா இருக்கும்..

270 0

உங்கள் வீட்டில் உள்ளோர் முட்டைகளை விரும்பி சாப்பிடுவார்களா? அதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் முட்டைகளை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே மாதிரி தான் முட்டைகளை செய்து கொடுப்பீர்களா? இதுவரை நீங்கள் முட்டையைக் கொண்டு தொக்கு செய்துள்ளீர்களா? அப்படியானால் இன்று முட்டை தொக்கு செய்து கொடுங்கள். இந்த முட்டை தொக்கு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த முட்டை தொக்கு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டை தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.வீட்டுல முட்டை இருக்கா? இந்த மாதிரி தொக்கு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு  பிரமாதமா இருக்கும்.. | Muttai Thokku Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/4 டீஸ்பூன்

* சோம்பு – 1/4 டீஸ்பூன்

* பட்டை – 1/4 இன்ச்

* கல்பாசி – 1 சிறிய துண்டு

* பிரியாணி இலை – 1

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 கப் (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1/2 இன்ச்

* பூண்டு – 6 பல்

* உப்பு – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1 டீஸ்பூன்

* வேக வைத்த முட்டை – 4

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து குறைவான தீயில் வைத்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரை தெளித்து விட்டு கிளறி, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* அதற்குள் வேக வைத்த முட்டைகளை எடுத்து, அதன் நடுவே ஆங்காங்கு கத்தியால் கீறி விட வேண்டும்.

* பின் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கீறி வைத்துள்ள முட்டைகள் மற்றும் சிறிது கறிவேப்பிலையை சேர்த்து சில நிமிடங்கள் கிளறி விட வேண்டும்.

* அதன் பின் அந்த முட்டைகளை வெந்து கொண்டிருக்கும் மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறி, மசாலா முட்டையுடன் நன்கு ஒன்று சேர்ந்ததும், அதை இறக்கினால், சுவையான முட்டை தொக்கு தயார்.

Related Post

ஜி.பி முத்து மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - April 15, 2023 0
டிக்டாக் பிரபலமான ஜிபிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் பிரபலம் ஜிபிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க்டாக் மூலம்…

👉 சோனி அறிமுகம் செய்யும் புதிய தமிழ் தொலைக்காட்சி 😲 | ‘VIZHA’ Channel Full Details

Posted by - February 10, 2026 0
Sony நிறுவனம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்காக புதிய தமிழ் அலைவரிசையை அறிமுகம் செய்துள்ளது! ‘VIZHA’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேனல், சினிமா, சீரியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,…

டீ டைமிற்கு ஏற்ற முட்டை போண்டா .. உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்.!

Posted by - April 10, 2023 0
முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவு தயாரித்து செய்யும் இந்த முட்டை போண்டா வித்தியாசமாக நல்ல சுவையுடன் இருக்கும். இந்த முட்டை போண்டாவை எளிதாக எப்படி செய்வது…

கிளாமரில் அசத்தும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.. வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்

Posted by - June 20, 2023 0
ப்ரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி ஷங்கர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பத்து…

Easy Tips:உடல் எடையை குறைக்க ஹன்சிகா மோத்வானி எடுத்துக்கொண்ட டயட் மற்றும் டிப்ஸ்…

Posted by - February 18, 2025 0
ஹன்சிகா மோத்வானி நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். குழந்தை நட்சத்திரமாக கடந்த 2003ம் ஆண்டு நடிக்க தொடங்கியலர் 2007ம் தெலுங்கில் Desamuduru படத்தின் மூலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *