வெயில் காலம் தானேனு அடிக்கடி மோர் குடிக்கிறீங்களா.? இந்த பக்கவிளைவுகளை சந்திப்பீங்க..!

227 0

மோர், நம் சமையலறைகளில் பொதுவாக காணப்படும் பானங்களில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்த ருசியான பானத்தை சுவைக்காமல் ஒவ்வொருவரின் கோடைக்காலம் முழுமையடையாது.

சில பிரத்தியேக கோடை கால பானங்களும் தேவைப்படும். அந்த பட்டியலில் மோர், ஒரு தனிச்சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. எவ்வளவு கொடுத்தாலும் குடிக்கலாம் என்கிற அளவுக்கு பலருக்கும் பிரியமான மோரில் சொல்லியடங்காத அளவு நன்மைகள் உள்ளன.

இது வெயில் காலங்களில் நம்மை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமில்லாமல், செரிமானத்திற்கு உதவுகிறது, நமது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது, பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது, வாய் தொடர்பான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, உங்கள் கொலஸ்ட்ரால் அளவு மற்றும் இரத்த அழுத்த அளவை குறைக்க உதவுகிறது.

இப்படி பல வகையான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள மோர், சில பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது என்று கூறினால் நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் அதுதான் உண்மை, ஆம்! தினமும் மோர் குடிப்பதால் சில சிக்கல்கள்ளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைப்பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

சிறிய அளவிலான மோரில் கூட நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஒரு கப் (அதாவது 245 மில்லி) மோரில் 98 கலோரிகள், 8 கிராம் புரதம், 3 கிராம் நார்ச்சத்து, 22% கால்சியம், 16% சோடியம் மற்றும் 22% வைட்டமின் பி12 ஆகியவைகள் உள்ளன.இதே மோர், சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் ‘சால்ட் கன்டென்ட்’ உடன் தொடர்புடைய பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? குறைந்த கொழுப்புள்ள மோர், அதிக கொழுப்புள்ள வெர்ஷன்களை காட்டிலும் அதிகமான சோடியத்தை கொண்டிருக்கும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதன் விளைவாகவே – மோர், தனக்கே உரிய சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.

 மோர்குடித்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்:

  • சளி, காய்ச்சல் அல்லது மகரந்த ஒவ்வாமையின் (pollen allergy) போன்ற நிலைகளின் போது, இரவு நேரங்களில் மோர் குடிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
  • வெண்ணெயில் இருந்து க்ரீமை (Malai) பிரித்தெடுப்பதன் மூலம் மோர் தயாரிக்கப்படுகிறது. இந்த காரணத்திற்காகவே எனவே குழந்தைகளுக்கு மோர் கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. ஏனெனில் வெண்ணெயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன அவைகள் குழந்தைகளின் தொண்டையில் தொற்று மற்றும் சளியை ஏற்படுத்தலாம்.
  • சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மோர் குடிப்பதை தவிர்க்கலாம். ஏனெனில் மோரில் சோடியம் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

Related Post

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை…

Posted by - December 30, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் தான் ஒனிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தலைமறைவாகி இருந்தாலும் ஜனனி தொடங்கும் தொழிலை தடுத்தே…

ஆர்வம் காட்டும் விஜய்.. முதல் ஆளாக கை கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Posted by - April 3, 2023 0
கோலிவுட்டின் மாஸ் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது விஜய் வாரிசு தொடர்ந்து…

கண்ணீர் விட்டு கதறும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! சீசன் 4 பைனலில் என்ன நடந்தது

Posted by - July 26, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஷோவாக இருந்து வரும் குக் வித்…

‘மட்டன் உப்பு கறி’ ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.!

Posted by - March 9, 2024 0
எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு…

ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் குறை கூறவில்லை.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

Posted by - May 18, 2023 0
அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *