‘மட்டன் உப்பு கறி’ ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.!

381 0

எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு கறியை ஒருமுறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள் ருசியாக இருக்கும்.

அசைவ உணவுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது மட்டன். அதுவும் மட்டனை காரசாரமாக சமைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும். முக்கியமாக சம்மரில் மட்டன் சாப்பிடுவது நமது உடல் வெப்பத்தைக் குறைக்கும். எனவே பலரும் இந்த வெயில் காலத்தில் மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள்.

எப்போதும் போல் மட்டனை குழம்பு, வறுவல் என செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா உங்களுக்கு. நீங்கள் மட்டனை வித்தியாசமாக முறையில் சமைத்து சாப்பிட நினைத்தால் காரசாரமான மட்டன் உப்பு கறியை ஒருமுறை இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள் ருசியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மட்டன் வேகவைக்க தேவையானவை :

  • மட்டன் – 500 கிராம்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • கல் உப்பு – தேவைக்கேற்ப
  • தண்ணீர் – தேவைக்கேற்ப

மற்ற பொருள்கள் :

  • நறுக்கிய சின்ன வெங்காயம் – 1 கப்
  • தக்காளி – 2
  • காய்ந்த குண்டு மிளகாய் – 20
  • முழு நாட்டு பூண்டு – 2
  • கருப்பு மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு

    செய்முறை :

    முதலில் குக்கரில் அலசிய மட்டன், மஞ்சள் தூள், கல் உப்பு மற்றும் 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அடுப்பில் மண் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து கொள்ளுங்கள்.

    அடுத்து அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த குண்டு மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் நாட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

    வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் குண்டு மிளகாயை கரண்டி கொண்டு ஓரளவிற்கு மசித்து கொள்ளவும். அப்போதுதான் அதன் கரம் கறியில் இறங்கும்.

    பிறகு அதனுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு தக்காளி நன்கு வதங்கும் வரை சமைக்கவும்.

    தக்காளி மென்மையாக வதங்கியவுடன் வேகவைத்த மட்டனை சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.

    சில நிமிடங்கள் கழித்து மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு மூடி கறி நன்றாக வேகும்வரை சமைக்கவும்.

    குறிப்பு : அடிக்கடி மூடியை திறந்து கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

    மட்டன் நன்றாக வெந்து தண்ணீரெல்லாம் வற்றி வறுபட்டவுடன் உப்பு சரியாக உள்ளதா என்று சரிபார்த்து அதன் பின் கறிவேப்பிலையை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.அவ்வளவுதான் சுவைமிக்க காரமான மட்டன் உப்பு கறி ரெடி…

Related Post

ஐஸ்வர்யா – தனுஷ் மீண்டும் இணைகிறார்களா!

Posted by - February 14, 2024 0
தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு நட்சத்திர ஜோடியாக இருந்தவர் தனுஷ் – ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் தங்களது பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். இருவரும் தங்களுடைய தனி…

கணவரின் பிறந்தநாள், எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்- செம லைக்

Posted by - March 18, 2023 0
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் இயக்க கடந்த சில மாதங்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரு தொடர் எதிர்நீச்சல். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்தி, ஆனாதிக்கம் உள்ள…

ஆர்வம் காட்டும் விஜய்.. முதல் ஆளாக கை கொடுத்த கீர்த்தி சுரேஷ்

Posted by - April 3, 2023 0
கோலிவுட்டின் மாஸ் நடிகராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். தற்போது விஜய் வாரிசு தொடர்ந்து…

உடலுக்கு மிகவும் அவசியமான வைட்டமின்-டி

Posted by - February 20, 2023 0
வைட்டமின்-டி என்பது எலும்பு, பற்களுக்கு அத்தியாவசியம். நமது உடலுக்குள் நடக்கும் முக்கியமான பல உயிர்வேதியியல் செயல்பாடுகளுக்கும், இந்த வைட்டமின் மிகவும் அடிப்படையானது. வைட்டமின்-டி குறைபாட்டால் ஆஸ்டியோபோரோஸிஸ், ரிக்கட்ஸ்,…

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் அடுத்து வரும் மாற்றம்! முடியப்போகிறதா?

Posted by - September 4, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒருகாலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் கதையில் பரபரப்பு குறைந்ததால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரேட்டிங்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *