ரிமோட்டால் டிவியை அடித்தது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்

217 0

இண்டியா கூட்டணியை ஆதரித்து மார்ச் 29-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: ரிமோட் எடுத்து டிவியில் அடித்தவர் தானே அங்கு செல்கிறார் என கூறினார்கள். நம் வீட்டு ரிமோட், நம் வீட்டு டிவி, ஆனால் டிவிக்கான மின்சாரத்தையும், ரிமோட்டுக்கான ஒரு பேட்டரியையும் எடுக்க பார்க்கும் ஒரு சக்தி மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

காந்தி இறக்கவில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்காக குண்டு ஏந்தி இறந்தார். அத்தகைய மதச்சார்பற்றஇந்தியாவுக்காக தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. இது தியாகமல்ல, இது ஒரு வியூகம்.அனைத்து இடங்களிலும் ஓடி ஓடி பிரச்சாரம் செய்வதை விட தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில இடங்களை திமுகவுடன் ஆலோசித்து தேர்வு செய்துள்ளோம்.

அதன்படி, மார்ச் 29-ம் தேதி ஈரோட்டில் தொடங்கி, 30-ல் சேலம், ஏப்.2-ல் திருச்சி, 3-ல் சிதம்பரம், 6-ல் பெரும்புதூர், சென்னை, 7-ல் சென்னை, 10-ல் மதுரை, 11-ல் தூத்துக்குடி, 14-ல் திருப்பூர், 15-ல் கோவை, 16-ல்பொள்ளாச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளேன். இங்கு வரலாறு காணாத அளவில் மக்கள் திரள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்கட்டமாக தொகுதிவாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Post

“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தின் கடன் அதிகரிப்பு” – இபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - February 19, 2024 0
சென்னை: “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சுமார் 8 லட்சத்து 33 ஆயிரத்து 361 கோடி கடன் உயர்ந்திருக்கிறது. இந்த கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக, ஒரு…
Generated Image November 15 2025 10 41AM

பீகார் முடிவு… செம குஷியில் திமுக.! காங்கிரஸ் இனி வாலாட்ட முடியாது

Posted by - November 15, 2025 0
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணியிடம் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள்…
fgdf

2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!

Posted by - May 8, 2026 0
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும்,…
tamilnasdu

சட்டப் பிரச்சினைகளை எதிர்கொள்ள திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெக வழக்கறிஞர் அணியை பலப்படுத்த விஜய் திட்டம்

Posted by - May 6, 2026 0
சென்னை: ​தி​முக, அதி​முக​வுக்கு இணை​யாக தவெகவின் வழக்​கறிஞர் அணியை பலப்​படுத்த விஜய் தீவிர நடவடிக்கை எடுத்து வரு​கிறார். தமிழகத்​தில் மாறி மாறி ஆட்​சிக்கு வந்த திமுக, அதி​முக​வுக்கு பெரும்…

கட்சி சேனல் நடத்துபவர்கள் எல்லாம் என்னிடம் பேச வேண்டாம்.

Posted by - January 5, 2023 0
கேள்வி எழுப்பிய செய்தியாளரை நோக்கி, “நீங்க எந்த சேனல்…நீங்க எந்த சேனல்” என அண்ணாமலை கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *